வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

கர்நாடக மாநில காங்கிரஸுக்கு புதிய தலைவர் நியமனம் 

கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக தினேஷ் குண்டுராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

News image
Updated On :4 ஜூலை 2018, 9:17 am

DIN

பெங்களூரு: கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக தினேஷ் குண்டுராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகாவில் தற்போது மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இக்கூட்டணி ஆட்சியில் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த ஜி.பரமேஷ்வரா, தற்பொழுது  மாநில துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக தினேஷ் குண்டுராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு முன் தென் கர்நாடகாவின் பொறுப்பாளராக இருந்த இவர், சமீபத்திய கூட்டணி அரசு பதவியேற்பின் .குழப்பமான சூழ்நிலையின் பொழுது, அமைதி காத்து அதே சமயம் கட்சியில் பிரச்சனை செய்தவர்களையும் சமாதானப்படுத்தினார்.  இவர் காந்திநகர் தொகுதியில் இருந்து 5 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல மாநில காங்கிரஸ் துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.