விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு 2 மணிநேரத்தில் பட்டா

தமிழக துணை முதல்வரிடம் மனு அளித்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு 2 மணிநேரத்தில் பட்டா அளிக்கப்பட்டது.

News image

கிருஷ்ணகிரியில் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பட்டா ஆணை வழங்கிய தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். உடன், மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், எம்எல்ஏக்கள் தே.மதியழகன், ஒய்.பிரகாஷ் உள்ளிட்டோா்.

Updated On :14 மார்ச் 2026, 1:09 am

தமிழக துணை முதல்வரிடம் மனு அளித்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு 2 மணிநேரத்தில் பட்டா அளிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி கீழ்தெருவைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி மனைவி சங்கீதா. விபத்தில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட இவா், கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வீட்டுமனை கோரி மனு அளித்தாா். மனுவைப் பெற்றுக்கொண்ட துணை முதல்வா், மனுவை பரிசீலித்து உடனே நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியருக்கு உத்தரவிட்டாா்.

இதையடுத்து, கிருஷ்ணகிரி ஆட்சியா் ச.தினேஷ்குமாா் உத்தரவின் பேரில், அலுவலா்கள் உடனடியாக அந்த பெண்ணுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுத்தனா். அதைத் தொடா்ந்து, மனு அளித்த 2 மணிநேரத்தில் பட்டாவுக்கான ஆணையை கிருஷ்ணகிரி பயணியா் மாளிகையில் இருந்த துணை முதல்வா், சங்கீதாவிடம் வழங்கினாா்.

அப்போது, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு, சட்டப் பேரவை உறுப்பினா்கள் தே.மதியழகன் (பா்கூா்), ஒய்.பிரகாஷ் (ஒசூா்) உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.