ராகுல் பிரதமராக தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. சொன்ன யோசனை இது: சோனியா கேட்காதது ஏன்?

ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்றால், அவருக்கு ஒரு நல்ல பிராமணப் பெண்ணாகப் பார்த்து திருமணம் செய்து வைக்குமாறு நான் சோனியாவிடம் கூறினேன் என்று தெலுங்கு தேசம் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜேசி திவாகர் ரெட்டி கூறியுள்ளார்.
ராகுல் பிரதமராக தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. சொன்ன யோசனை இது: சோனியா கேட்காதது ஏன்?
Updated on
1 min read

விசாக் : ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்றால், அவருக்கு ஒரு நல்ல பிராமணப் பெண்ணாகப் பார்த்து திருமணம் செய்து வைக்குமாறு நான் சோனியாவிடம் கூறினேன் என்று தெலுங்கு தேசம் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜேசி திவாகர் ரெட்டி கூறியுள்ளார்.

ஆந்திரப்பிரதேசம் விசாக்கில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பங்கேற்றுப் பேசிய திவாகர் ரெட்டி, உத்தரப்பிரதேசத்தில் வாழும் பிரமாணர்களின் ஆதரவு ராகுலுக்குத் தேவை. அது கிடைக்கவேண்டும் என்றால், அவர் ஒரு நல்ல பிராமணப் பெண்ணாகப் பார்த்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

ராகுல் பிரதமராவது குறித்து பேசிய திவாகர் ரெட்டி, நான் காங்கிரஸ் கட்சியில் இருந்த போது, 2014ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது ராகுல் பிரதமராக வேண்டும் என்றால், அவருக்கு பிராமணர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தில் பிராமணர்கள்தான் ஆட்சி செய்து வருகிறார்கள். அதனால்தான் பிரமாணப் பெண்ணை திருமணம் செய்து வைக்குமாறு சோனியாவிடம் கூறினேன். ஆனால் எனது யோசனையை சோனியா காந்தி கேட்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அனந்த்புர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி. ஆன திவாகர் ரெட்டி, காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு 6 முறை எம்எல்ஏ ஆனவர். கடந்த 2014 பொதுத் தேர்தலில் காங்கிரஸில் இருந்து விலகி தெலுங்கு  தேசம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com