தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மகாராஷ்டிரம்: 2 ஆண்டுகளுக்கு பின் பேரவையில் சகன் புஜ்பல்

மகாராஷ்டிரத்தில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்துள்ள முன்னாள் துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏவுமான சகன் புஜ்பல்,

Updated On :9 ஜூலை 2018, 7:24 pm

மகாராஷ்டிரத்தில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்துள்ள முன்னாள் துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏவுமான சகன் புஜ்பல், 2 ஆண்டு இடைவெளிக்கு சட்டப் பேரவை கூட்டத்தில் திங்கள்கிழமை பங்கேற்றார்.
மகாராஷ்டிர சட்டப் பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர், மாநிலத்தின் 2-ஆம் தலைநகராக கருதப்படும் நாகபுரியில் நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை காலை 11 மணிக்கு அவை அலுவல்கள் தொடங்கியபோது, முன்னாள் துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏவுமான சகன் புஜ்பல் அவைக்கு வந்தார்.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் கடந்த 2016-ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட புஜ்பல், பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர், கடந்த மே மாதத்தில் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக பேரவைக் கூட்டத்தில் திங்கள்கிழமை புஜ்பல் பங்கேற்றார். அப்போது, பல்வேறு விவகாரங்களில் மாநில அரசின் செயல்பாடுகளை புஜ்பல் விமர்சித்தார். மும்பையில் ரிலையன்ஸ் இன்பராஸ்ட்ரக்சர் நிறுவனம் தனது மின்விநியோக வர்த்தகத்தை, அதானி நிறுவனத்துக்கு விற்பதற்கு மகாராஷ்டிர மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்த நடவடிக்கையையும் அவர் கடுமையாக சாடினார். 
மேலும், விவசாயிகளுக்கும், பழங்குடியின மக்களுக்கும் அளித்த வாக்குறுதியை பாஜக அரசு நிறைவேற்றவில்லை எனவும் புஜ்பல் குற்றம்சாட்டினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.