40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரத்துக்கு தில்லி நீதிமன்றம் முன்ஜாமீன்

ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பாக சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப. சிதம்பரத்துக்கு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி வரை

News image
Updated On :24 ஜூலை 2018, 1:23 am IST

ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பாக சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப. சிதம்பரத்துக்கு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி வரை தில்லி சிறப்பு நீதிமன்றம் முன்ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.
இதுதொடர்பான வழக்கில் தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில், சிபிஐ அதிகாரிகள் கடந்த 19ஆம் தேதி துணைநிலை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அதில், ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அந்த துணை நிலை குற்றப்பத்திரிகையை, வரும் 31-ஆம் தேதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி தெரிவித்தார்.
இந்நிலையில், தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப. சிதம்பரம் முன்ஜாமீன் கோரி திங்கள்கிழமை காலை மனு தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி ஒ.பி. சைனி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது ப. சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் அளிக்க சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் கூறுகையில், இந்த மனு விசாரணைக்கு உகந்தது இல்லை; கைது செய்யப்படலாம் என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரத்தை ப. சிதம்பரம் தாக்கல் செய்யவில்லை' எனக் குறிப்பிடப்பட்டது.
மேலும், ப. சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு தொடர்பாக பதிலளிக்க போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் சிபிஐ கோரிக்கை விடுத்தது.
இதையடுத்து நீதிபதி சைனி, இந்த மனு மீதான அடுத்தக்கட்ட விசாரணையை ஆக்ஸட் மாதம் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
அப்போது நீதிபதி, ஆகஸ்ட் 7ஆம் தேதி வரையிலும் ப. சிதம்பரத்துக்கு எதிராக கைது நடவடிக்கை உள்ளிட்ட கடும் நடவடிக்கையை சிபிஐ எடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டார். இதனிடையே, ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் தொடர்பாக அமலாக்கத் துறையால் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் முன்ஜாமீன் கோரி, தில்லி உயர் நீதிமன்றத்தில் ப. சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு, தில்லி உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 24) விசாரணைக்கு வரவுள்ளது.
பின்னணி: மத்திய நிதியமைச்சராக கடந்த 2006-ஆம் ஆண்டு ப.சிதம்பரம் பதவி வகித்தபோது ஏர்செல் நிறுவனத்தில் மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான குளோபல் கம்யூனிகேஷனல் நிறுவனத்தால் ரூ.3,500 கோடி முதலீடு செய்யப்பட்டது. இதற்கு வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் அளித்தது.
சட்ட விதிகளின்படி, ரூ.600 கோடி வரையிலான வெளிநாட்டு முதலீடுகளுக்கு மட்டுமே வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் அளிக்க முடியும். 
அதைவிட அதிக மதிப்புடைய முதலீடுகளுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவே ஒப்புதல் அளிக்க வேண்டும். எனவே, இந்த விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய சிபிஐ முதலில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருந்தது. 
எனினும், தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரத்தை சிபிஐ தாக்கல் செய்யாததால், அவர்கள் இருவரையும் தில்லி சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது.
இந்நிலையில், தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 19ஆம் தேதி சிபிஐ துணை நிலை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் ப. சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகிய 2 பேர் மீதும் சிபிஐ குற்றஞ்சாட்டியுள்ளது. இதேபோல், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தில் ரூ.305 கோடி வெளிநாட்டு முதலீடு செய்யப்பட்டது தொடர்பாகவும் ப. சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியன தனித்தனியே வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.