தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

ஆப்பிரிக்காவுக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி!

ஆப்பிரிக்க நாடுகளுக்கான அரசு முறை பயணத்தின் முதற்கட்டமாக பிரதமர் மோடி இந்தியாவில் இருந்து ருவாண்டாவுக்கு திங்கள்கிழமை புறப்பட்டார். 

News image
Updated On :23 ஜூலை 2018, 4:28 pm IST

ஆப்பிரிக்க நாடுகளுக்கான அரசு முறை பயணத்தின் முதற்கட்டமாக பிரதமர் மோடி இந்தியாவில் இருந்து ருவாண்டாவுக்கு திங்கள்கிழமை புறப்பட்டார். 

பிரதமர் மோடி ருவாண்டா, உகாண்டா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக செல்கிறார். இதன் முதற்கட்டமாக அவர் திங்கள்கிழமை பிற்பகல் ருவாண்டாவுக்கு புறப்பட்டார். 

ருவாண்டாவுக்கு செல்லும் முதல் இந்தியப் பிரதமர் என்ற தனித்துவத்தை இந்தப் பயணம் மூலம் மோடி அடைகிறார். இதையடுத்து, உகாண்டாவுக்கு ஜூலை 24-ஆம் தேதி மோடி செல்கிறார். கடந்த 21 ஆண்டுகளில் உகாண்டாவுக்கு செல்லும் முதல் இந்தியப் பிரதமர் மோடி ஆவார். உகாண்டா நாடாளுமன்றத்திலும் மோடி உரையாற்றுகிறார். 

இதைத்தொடர்ந்து, 10-ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக மோடி ஜூலை 25-ஆம் தேதி தென் ஆப்பிரிக்கா சென்றடைகிறார். பிரிக்ஸ் மாநாட்டுக்கு இடையே  சீன அதிபர் ஷி ஜின்பிங்கையும் மோடி சந்திக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.