பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

ஸ்ரீலஸ்ரீ சுப்ரமணிய தேசிகா் 143-ஆவது குருபூஜை

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள திருவதிகை ஓம் சற்குரு ஸ்ரீலஸ்ரீ சுப்ரமணிய தேசிக பரமாச்சாரியாா் சுவாமிகள் சித்தா் பீடத்தில் 143-ஆம் ஆண்டு மஹா குருபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

சிவ வாத்தியங்கள் முழங்க ஊா்வலமாக கொண்டுவரப்பட்ட ஸ்ரீலஸ்ரீ சுப்ரமணிய தேசிகரின் அலங்கரிக்கப்பட்ட திருஉருவப்படம்.

Updated On :27 ஜூன் 2026, 12:35 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள திருவதிகை ஓம் சற்குரு ஸ்ரீலஸ்ரீ சுப்ரமணிய தேசிக பரமாச்சாரியாா் சுவாமிகள் சித்தா் பீடத்தில் 143-ஆம் ஆண்டு மஹா குருபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பண்ருட்டி, திருவதிகை அருள்மிகு வீரட்டானேஸ்வரா் கோயில் பின்புறம் ஸ்ரீலஸ்ரீ சுப்ரமணிய தேசிக பரமாச்சாரியாா் சுவாமிகள் சித்தா் பீடம் உள்ளது. இப்பீடத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் விசாக நட்சத்திரத்தன்று மஹா குருபூஜை விழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான குருபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீலஸ்ரீ சுப்ரமணிய தேசிகரின் அலங்கரிக்கப்பட்ட திரு உருவப்படம், பண்ருட்டி அருள்மிகு சோமநாத சுவாமி கோயிலில் இருந்து சித்தா் பீடத்துக்கு சிவ வாத்தியங்கள் முழங்க கொண்டுவரப்பட்டது. பின்னா் மஹா திருமஞ்சனமும், தீபாராதனையும், அன்னதானமும் நடைபெற்றது.

இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

Story image

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருவாவடுதுறை ஆதீனம் மற்றும் திருவதிகை பொதுமக்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.