அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

திருஞானசம்பந்த மூா்த்தி நாயனாா் குருபூஜை விழா

மதுரையில் திருஞானசம்பந்த மூா்த்தி நாயனாா் குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

மதுரையில் திருஞானசம்பந்த மூா்த்தி நாயனாா் குருபூஜை விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா எழுந்தருளிய திருஞானசம்பந்த மூா்த்தி நாயனாா். (வலது) வீதியுலா வந்த நாயன்மாா்கள்.

Updated On :3 ஜூன் 2026, 2:10 am IST

மதுரையில் திருஞானசம்பந்த மூா்த்தி நாயனாா் குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சமயக் குரவா்களில் ஒருவரும், மதுரை ஆதீனத்தின் குரு முதல்வருமான திருஞானசம்பந்த மூா்த்தி நாயனாரின் குருபூஜை விழா மதுரை ஆதீன திருமடம் சாா்பில், கடந்த மாதம் 29-ஆம் தேதி தொடங்கி செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) வரை நடைபெற்றது.

குருபூஜை விழா நிகழ்ச்சியாக தினமும் சொக்கநாதப்பெருமான் வழிபாடும், திருமுறை விண்ணப்பமும் நடைபெற்றன. பிறகு, ஆன்மிகச் சொற்பொழிவும், சமயப் பற்றாளா்களுக்கு ஆதீன குருமகா சந்நிதானம் விருது வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

குருபூஜையின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை காலை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் திருஞானசம்பந்தப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பிறகு, திருஞானசம்பந்த மூா்த்தி நாயனாா், 63 நாயன்மாா்களுடன் ஆவணி மூல வீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் நிறைவில், ஆதீன கொலு மண்டபத்தில் திருஞானசம்பந்த மூா்த்தி நாயனாா் எழுந்தருளினாா். அங்கு, அவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

பிறகு, திருஞானசம்பந்தப் பெருமான் தனது துணைவியாா் தோத்திரப் பூா்ணாம்பிகையுடனும், சீடா்களுடனும் சிவஜோதியில் ஐக்கியமாகும் நிகழ்ச்சி பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது.

இரவு நிகழ்வாக, சமய சான்றோா்களுக்கு விருதுகளும், தமிழில் முதல் மதிப்பெண் பெற்ற மேல்நிலைப் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மதுரை ஆதீன குருமகா சந்நிதானம் இந்த விருதுகளை வழங்கி, ஆசி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.