சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

ஜிஎஸ்டி விகிதத்தை மேலும் குறைக்க பரிசீலனை: ராஜ்நாத்

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதத்தை மேலும் குறைப்பதற்கு மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Updated On :24 ஜூலை 2018, 1:21 am IST

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதத்தை மேலும் குறைப்பதற்கு மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி கவுன்சிலின் 28-ஆவது கூட்டம் தில்லியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது அப்போது, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்பட 88 பொருள்களுக்கு வரியை குறைப்பது என முடிவு செய்யப்பட்டது. நாப்கின் சிறு கைவினைப் பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரி முழுவதும் ரத்து செய்யப்பட்டது.
ஜிஎஸ்டி குறைப்பு: இந்நிலையில், தில்லியில் திங்கள்கிழமை தேசிய வர்த்தகர்கள் மாநாட்டை தொடங்கி வைத்த ராஜ்நாத் சிங் பேசியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு சிறப்பான பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் மூலம் உலகின் பலம் வாய்ந்த பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது. பல்வேறு பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு பலமுறை குறைத்துள்ளது. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களும், ஏழை மக்கள் உருவாக்கும் கைவினைப் பொருள்களும், உணவுப் பொருள்களும் ஜிஎஸ்டி-யில் இருந்து முழுமையாக விலக்குப் பெற்றுள்ளன. பல முக்கியப் பொருள்கள் 5 சதவீத ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி விகிதத்தை மேலும் குறைக்க மத்திய அரசு தயாராகவே உள்ளது.
அமலுக்குப் பிறகு...: நாட்டில் 6.5 கோடி வர்த்தகர்களும், கடை நடத்துபவர்களும் உள்ளனர். இதில் 1.25 கோடி பேர் ஜிஎஸ்டி-யின் கீழ் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர். நாட்டின் மிகப்பெரிய வரிச் சீர்திருத்தமான ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு, வரி செலுத்தும் வர்த்தகர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் பலம் வாய்ந்த மற்றும் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 9-ஆவது இடத்தில் இருந்தது. 
சமீபத்தில் நமது நாடு இந்தப் பட்டியலில் பிரான்ஸை பின்னுக்குத்தள்ளி 6-ஆவது இடத்தைப் பிடித்தது. அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் சர்வதேச அளவில் மிகப்பெரிய பொருளதாரத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் 5 இடத்துக்குள் வரும். 
இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியை இதே அளவில் நாம் தொடர்ந்து அதிகரித்துச் செல்லும்போது 2030-ஆம் ஆண்டில் உலகின் மூன்று மிகப்பெரிய பொருளாதார சக்திகளில் ஒன்றாக இந்தியா திகழும்.
அதிக அந்நிய முதலீடு: அன்னிய முதலீடுகளைக் ஈர்ப்பதில் இந்தியா இப்போது சிறப்பான இடத்தில் உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 150 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் இந்தியாவுக்கு அந்நிய முதலீடு கிடைத்துள்ளது. 
மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு சட்டத் திருத்தங்கள், நமது நாட்டை தொழில் தொடங்குவதற்கு உகந்த நாடாக மாற்றியுள்ளது. தொழில் தொடங்குவதற்கு உகந்த நாடுகள் பட்டியலில் 147 ஆவது இடத்தில் இருந்த இந்தியா, இப்போது 100-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
உற்பத்தி துறையில்...: இந்தியாவில் உருவாக்குவோம் திட்டத்தின் மூலம் உற்பத்தித் துறையில் இந்தியா சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. 2014-ஆம் ஆண்டில் இந்தியாவில் இரு செல்லிடப்பேசி உற்பத்தி ஆலைகள் மட்டுமே இருந்தன. இப்போது 120 செல்லிடப்பேசி உற்பத்தி ஆலைகள் நமது நாட்டில் உள்ளன. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன என்றார் ராஜ்நாத் சிங்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.