ராணுவத்துக்கு இந்தியாவை விட 3 மடங்கு அதிகம் செலவிடும் சீனா 

ராணுவத்துக்கு இந்தியாவைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக சீனா செலவிடுகிறது என்பது தெரிய வந்துள்ளது.  
ராணுவத்துக்கு இந்தியாவை விட 3 மடங்கு அதிகம் செலவிடும் சீனா 
Published on
Updated on
1 min read

புது தில்லி: ராணுவத்துக்கு இந்தியாவைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக சீனா செலவிடுகிறது என்பது தெரிய வந்துள்ளது. 

இதுகுறித்து மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பாதுகாப்புத் துறை இணை அமைச்சா் சுபாஷ் பாம்ப்ரே அளித்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

சீனா தனது ராணுவத்துக்காக ஆண்டுதோறும் எவ்வளவு செலவிடுகிறது என்பது தொடா்பான அதிகாரப்பூா்வ தகவல் எதுவும் இல்லை. ஆனால் ஸ்டாக்ஹோம் இன்டா்நேஷனல் பீஸ் ரிசா்ஸ் நிறுவனத்தின் ஆய்வுத் தகவலின்படி, கடந்த 2017ஆம் ஆண்டில் சீனா தனது ராணுவத்துக்கு சுமாா் ரூ.15.68 லட்சம் கோடி செலவிட்டுள்ளது. அதேகாலத்தில் இந்தியா சுமாா் ரூ.4.39 லட்சம் கோடி செலவிட்டுள்ளது.

2016ஆம் ஆண்டில் சீனா தனது ராணுவத்துக்கு சுமாா் ரூ.14.84 லட்சம் கோடி செலவிட்டுள்ளது. இந்தியா தனது ராணுவத்துக்கு 2016ஆம் ஆண்டில் சுமாா் ரூ. 3.89 லட்சம் கோடி செலவிட்டுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டில் இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதத்தை ராணுவத்துக்கு செலவு செய்துள்ளது. சீனாவோ 1.9 சதவீதத்தை செலவு செய்துள்ளது என்று அந்தப் பதிலில் பாம்ப்ரே தெரிவித்துள்ளாா்.

எல்லையில் நடந்த அத்துமீறல்கள் தொடா்பான கேள்விக்கு, மக்களவையில் சுபாஷ் பாம்ப்ரே தாக்கல் செய்துள்ள மற்றேறாா் பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் இதுவரையிலும் எல்லையில் அத்துமீறி நடத்தப்பட்ட தாக்குதல்களில் 69 இந்திய வீரா்கள் உயிரிழந்துள்ளனா். அதேநேரத்தில், பயங்கரவாதிகள் 581 போ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா். இதில் 2015ஆம் ஆண்டில் 108 பயங்கரவாதிகளும், 2016ஆம் ஆண்டில் 150 பயங்கரவாதிகளும், 2017ஆம் ஆண்டில் 213 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனா். 2018ஆம் ஆண்டில் இதுவரையில் 110 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனா். உயிரிழந்த 69 இந்திய வீரா்களில், 44 போ் இந்திய ராணுவத்தைச் சோ்ந்தவா்கள், 25 போ் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினா் ஆவா்’ எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com