மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பைதியநாத் மஜூம்தார் சிலை புதன்கிழமை இரவு சேதப்படுத்தப்பட்டுள்ளது.
திரிபுராவில், 25 ஆண்டுகால கம்யூனிஸ்ட் ஆட்சி முடிவுக்கு வந்தவுடன் அங்கு பாஜக ஆட்சியை கைப்பற்றியது. அதன்பிறகு அங்கு இடதுசாரி சிந்தனையாளர்கள் மற்றும் இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே லெனின், சேகுவாரா போன்ற தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டது அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த வரிசையில் புதன்கிழமை இரவு மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் மஜூம்தார் சிலை சேதப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு பாஜகவைச் சேர்ந்த அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டி கண்டனம் தெரிவித்து வருகிறது.
மஜூம்தார், 1993 முதல் 1998 வரை மாநில துணை முதல்வராக இருந்துள்ளார். 1998-2008 வரை கட்சியின் மாநிலச் செயலாளராக செயல்பட்டுள்ளார். அதன்பிறகு, கட்சி செயல்பாடுகளில் இருந்து அவர் ஒய்வு பெற்றார். இவர், கடந்த 2011-இல் காலமானார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு... பிரதமர் மோடி முக்கிய வேண்டுகோள்!

சிஎஸ்கே பேட்டிங்: சர்ஃபராஸ் கானுக்குப் பதிலாக உர்வில் படேல்!

மே 1 முதல் சென்னையில் வெயில் சுட்டெரிக்கும்! தமிழ்நாடு வெதர்மேன்

தஞ்சை பெரிய கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


