கழிவறையிலும் காவி: சர்ச்சையில் சிக்கிய உத்தரப் பிரதேச முதல்வர் பங்கேற்ற விழா 

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்ற விழா ஒன்றில், அரங்கத்தின் கழிவறையிலும் காவி  டைல்ஸ்கள் ஒட்டப்பட்ட விவகாரம் தற்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கழிவறையிலும் காவி: சர்ச்சையில் சிக்கிய உத்தரப் பிரதேச முதல்வர் பங்கேற்ற விழா 
Published on
Updated on
1 min read

லக்னௌ: உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்ற விழா ஒன்றில், அரங்கத்தின் கழிவறையிலும் காவி  டைல்ஸ்கள் ஒட்டப்பட்ட விவகாரம் தற்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேச முதல்வராக பாஜகவின் யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றதிலிருந்து அம்மாநிலத்தில் எங்கும் காவி, எதிலும் காவி என்னும் போக்கே மேலோங்கி காணப்படுகிறது. குறிப்பாக அரசு அலுவலங்கள், புதிய கட்டிடங்கள் என அனைத்திற்கும் காவி நிறத்தை பூசி வந்த பாஜக வினர், கடந்த மாதம் அம்பேத்கர் சிலை ஒன்றுக்கு கூட காவி நிறத்தை பூசிய விவகாரம் பெரும் சர்சையைக் கிளப்பியது. பின்னர் சிலைக்கு மீண்டும் நீல நிறமே பூசப்பட்டது. பொதுவாக உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் காவி நிறம் மேலோங்கி காணப்படுவது என்பது இயல்பான ஒன்றாகும் .

இந்நிலையில் யோகி ஆதித்யநாத் பங்கேற்ற விழா ஒன்றில், அரங்கத்தின் கழிவறையிலும் காவி  டைல்ஸ்கள் ஒட்டப்பட்ட விவகாரம் தற்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அங்குள்ள புகழ்பெற்ற 'ரஷ்கான்' அரங்கத்தில்  நடைபெற்றது. இந்த விழாவுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமை தாங்கினார். அவரது வருகையினை ஒட்டி விழா மேடை, தோரணங்கள், திரைச்சீலை என எல்லாமே காவி நிறமாக காட்சியளித்தது.

அதன் உச்சகட்டமாக அரங்கில் உள்ள கழிவறை சுவர்களில் ஏற்கனவே இருந்த வெள்ளை டைல்ஸ் ஓடுகள் அகற்றப்பட்டு அதற்கு பதிலாக காவி நிற டைல்ஸ் ஓடுகள் பதிக்கப்பட்டன. இவ்வாறு முதலவர் பங்கேற்கும் விழா அரங்கின் கழிவறை சுவர்களில் கூட காவி நிற ஓடுகள் பதிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை மாநிலத்தில் உண்டாக்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com