ஷில்லாங்கில் 4 நாள்களுக்குப் பிறகு அமைதி திரும்பியது
மேகாலய மாநிலத் தலைநகர் ஷில்லாங்கில் 4 நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை அமைதி திரும்பியது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு எவ்வித வன்முறை சம்பவங்களும் நிகழவில்லை காவல் துறை அதிகாரிகள்


மேகாலய மாநிலத் தலைநகர் ஷில்லாங்கில் 4 நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை அமைதி திரும்பியது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு எவ்வித வன்முறை சம்பவங்களும் நிகழவில்லை காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், அங்கு ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் உள்ளது.
ஷில்லாங்கில் கடந்த வெள்ளிக்கிழமை பேருந்து நடத்துனருக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அது இரு பிரிவினர் இடையிலான வன்முறையாக மாறியது. வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீஸார் முற்பட்டபோது, அவர்கள் மீது வன்முறையாளர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி ஆர்ப்பாட்டக்காரர்களை போலீஸார் விரட்டி அடித்தனர்.
ஷில்லாங்கில் சீக்கியர்கள் வசிக்கும் பகுதியில் மர்ம நபர்கள் சிலர் கற்களை வீசித் தாக்குதல் நடத்த முயன்றனர். ஏராளமான கடைகள், வீடுகள் மற்றும் வாகனங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. இதில் போலீஸார் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வன்முறையைக் கட்டுப்படுத்த கூடுதலாக 1000 துணை ராணுவப் படையினர் திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனர். நகரின் முக்கியப் பகுதிகளில் ராணுவத்தினர் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் கொடி அணிவகுப்பு நடத்தினர். கலவரத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் அதிக அளவில் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். இதையடுத்து, அங்கு செவ்வாய்க்கிழமை கல்வீச்சு, தீவைப்பு என எந்த வன்முறைச் சம்பவங்களும் நிகழவில்லை.
சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் பஞ்சாப் லேன் பகுதியில் நிகழ்ந்த வன்முறைகள், பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு நகர்ப்புற மேம்பாட்டுத் துறைக்கு மாநில முதல்வர் கான்ட்ராட் கே. சர்மா உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...