ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒன்றாகச் செல்ல முடியாது: பாகிஸ்தானுக்கு நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை

பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒன்றாகச் செல்ல முடியாது என்று பாகிஸ்தானுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News image
Updated On :5 ஜூன் 2018, 9:37 am

புதுதில்லி: பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒன்றாகச் செல்ல முடியாது என்று பாகிஸ்தானுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டதை அடுத்து இரு நாடுகள் இடையே போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் செய்யப்பட்டது. இருநாட்டு ராணுவ நடவடிக்கைகளுக்கான உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.

ஆனால் இந்த ஒப்பந்தத்தினை மதிக்காத பாகிஸ்தான் மீண்டும் இந்திய எல்லை பகுதியில் தாக்குதல் நடத்துகிறது. அத்துடன் இந்தியாதான் தங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துகிறது என குற்றம் சாட்டும் பாகிஸ்தான், அமைதியை விரும்புகிறோம் என்பதற்காக பலவீனமாக உள்ளோம் என்று எண்ண வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்தது.

இரு நாடுகளுக்கு இடையே அமைதியை நிலைநாட்டும் வகையில் இருநாட்டு அதிகாரிகள் மத்தியில் எல்லையில் திங்களன்று திட்டமிடப்பாடாத அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்நிலையில் பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒன்றாகச்  செல்ல முடியாது என்று பாகிஸ்தானுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

ஜம்மு காஷ்மீரில் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இந்தியா மதிப்பளிக்கிறது. ஆனால் அதே சமயம் பாகிஸ்தான் இந்தியப் பிராந்தியத்தில் அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டால் இந்திய ராணுவம் சரியான பதிலடியை கொடுக்கும். எப்போதும் பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒன்றாகச் செல்ல முடியாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.