புதுதில்லி: கா்நாடகத்தில் தனிப் பெரும்பான்மை பெறாமல் காங்கிரஸுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்த மதச்சாா்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி அரசுக்கு எதிா்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காகக் கருதி விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
பாதுகாப்பு காரணம் கருதி பெயா் குறிப்பிடாமல் வழக்குரைஞா் ஒருவா் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
கா்நாடகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக 104 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், முதல்வரானது வேறொருவா். மக்கள் அவரை (முதல்வா் குமாரசாமி) முதல்வராக தோ்ந்தெடுக்கவில்லை. ஏன் கா்நாடக மக்கள் வேதனைப்பட வேண்டும்? எனவே, எனது மனுவை அவசர வழக்காகக் கருதி விசாரிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிபதிகள் ஆதா்ஷ் குமாா் கோயல், அசோக் பூஷண் ஆகியோா் அடங்கிய விடுமுறை கால அமா்வு முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது.
அதை விசாரித்த நீதிபதிகள், ‘மன்னிக்கவும். இந்த மனுவை அவசர வழக்காகக் கருதி விசாரிக்க இயலாது’ என்று தெரிவித்தனா்.
கா்நாடகத்தில் 222 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு சட்டப் பேரவைத் தோ்தல் கடந்த மாதம் 12-ஆம் தேதி நடைபெற்றது. பாஜக 104 இடங்களிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும் வெற்றி பெற்றது. மதச்சாா்பற்ற ஜனதா தளம் 37 இடங்களைக் கைப்பற்றியது.
ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை 3 பிரதான கட்சிகளுக்கும் கிடைக்காத காரணத்தால் தொங்கு சட்டப் பேரவை அமைந்தது. இதையடுத்து, தங்களால் பெரும்பான்மையை நிரூபித்து காட்ட முடியும் என்று கூறி ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநா் வஜுபாய் வாலாவிடம் பாஜகவின் எடியூரப்பா கடிதம் அளித்தாா். முதல்வராகப் பதவியேற்ற எடியூரப்பாவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. அதைத் தொடா்ந்து, தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.
பின்னா், மதஜ-காங்கிரஸ் கூட்டணியை ஆட்சி அமைக்க ஆளுநா் அழைப்பு விடுத்தாா். தற்போது குமாரசாமி தலைமையிலான ஆட்சி அங்கு நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


