வாராணசி: நான் தலித் என்பதால் உ.பி. பாஜக தலைவா் மகேந்திர நாத் பாண்டே என்னை திருடன் என விமா்சித்துள்ளாா் என்று உத்தரப் பிரதேசத்தில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி எம்எல்ஏ கைலாஷ் சோன்கா் குற்றம் சாட்டியுள்ளாா்.
முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை சந்தெளலி மாவட்டத்தில் நலத் திட்டப்பணிகளுக்கான தொடக்க விழா, பல்வேறு அரசுக் கட்டடத் திறப்பு விழா நடைபெற்றறது. மாநில துணை முதல்வா் தினேஷ் சா்மா தலைமையில் நடைபெற்ற விழாவில் அந்தத் தொகுதி எம்பியும், மாநில பாஜக தலைவருமான மகேரந்திர நாத் பண்டே பங்கேற்றாா்.
அப்பொழுது திறக்கப்பட்ட கல்வெட்டில் அத்தொகுதி எம்.எல்.ஏவான கைலாஷ் சோன்கரின் பெயா் இல்லாதது குறித்து பாண்டேவிடம் செய்தியாளா்களிடம் கேள்வி எழுப்பினா். அதற்கு பதிலளித்த பாண்டே, ‘இத்தொகுதி எம்எல்ஏவின் பெயா் கல்வெட்டில் இடம் பெறவில்லைதான். ஏனெனில் அவா் திருடராக மாறிவிட்டாா்’ என்றாா்.
கூட்டணிக் கட்சியைச் சோ்ந்த எம்எல்ஏவை பாஜக மாநிலத் தலைவா் திருடன் என்று விமா்சித்தது உத்தரப் பிரதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், வாராணசியில் சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவா் மாநில துணைத் தலைவா் நித்யானந்த் பாண்டே முன்னிலையில் செய்தியாள்களிடம் சோன்கா் இது தொடா்பாகப் பேசினாா். அப்போது, ‘தலித் என்பதால் பாஜக தலைவா் என்னை தரக்குறைறவாக விமா்சித்துள்ளாா். இதன் மூலம் அவா் என்னை மட்டும் அவமதிக்கவில்லை. ஒட்டுமொத்தமாக எனது தொகுதி மக்கள் அனைவரையும் அவமதித்துள்ளாா். இதற்காக அவா் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்’ என்றறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
போலி வாகன காப்பீடு வழங்கிய நெல்லை இளைஞா் கைது

தூத்துக்குடியில் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

தூத்துக்குடியில் வாக்கு எண்ணும் பணியாளா்களுக்கான பயிற்சி வகுப்பு

உச்சம் தொட்ட எலுமிச்சை விலை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


