ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

நிறத்தை விமர்சித்ததால் விசேஷத்தில் விஷம் வைத்த பெண்: 5 பேர் பலி, 120 பேர் கவலைக்கிடம்

தனது நிறத்தை விமர்சித்ததால் உறவினரின் புதுமனை விசேஷத்தின் விருத்தில் பெண் ஒருவர் வைத்த விஷத்தால் குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

News image
Updated On :23 ஜூன் 2018, 12:34 pm

தனது நிறத்தை விமர்சித்ததால் உறவினரின் புதுமனை விசேஷத்தின் விருத்தில் பெண் ஒருவர் வைத்த விஷத்தால் குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

மஹாராஷ்டிரத்தில் உள்ள ராய்கட் மாவடத்தின் மஹத் எனும் கிராமத்தில் வசிக்கும் பிரக்யா சுர்வாஸி என்ற பெண், தனது நிறம் குறித்து விமர்சித்ததால் அவரது உறவினரின் புதுமனை புகுவிழாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தில் பூச்சி மருந்து கலந்துள்ளார்.

சுபாஷ் மனே என்பவரின் வீட்டு விசேஷத்துக்கு வந்தவர்களில் அந்த விஷம் கலந்த உணவை உண்ட சம்பவத்தில் 4 குழந்தைகள் மற்றும் ஒரு முதியவர் என 5 பேர் உயிரிழந்தனர். 120 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜூன் 18-ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக ராய்கட் காவல்நிலைய எஸ்.பி. அனில் பரஸ்கார் மேற்கொண்ட விசாரணையில் பூச்சி மருந்து கலந்ததாக சம்பந்தப்பட்ட பெண் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.