பாலியல் வன்முறைகள், ஆள்கடத்தல் என பெண்களுக்கு ஆபத்து அதிகமுள்ள நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளதை அறிந்து அவமானப்படுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். பிரதமர் மோடியின் உடற்பயிற்சி விடியோவை குறிப்பிட்டு அவர் விமர்சித்தார்.
சமூக வலைதளமான சுட்டுரையில் இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம், வன்முறைகள் அதிகம் நடக்கும் நாடுகளில் ஆப்கானிஸ்தான், சிரியா, சவூதி அரேபியா ஆகியவற்றை கடந்து இந்தியா முன்னணியில் உள்ளது.
இதுபோன்ற கால கட்டத்தில்தான் பிரதமர் மோடி உடற்பயிற்சி, யோகப் பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்வது போன்ற விடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்கிறார்.
பெண்களுக்கு நாட்டில் பாதுகாப்பில்லை என்று ஓர் ஆய்வில் குறிப்பிட்டுள்ளதை அறிந்து அவமானப்படுகிறேன்' என்று ராகுல் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு எதிராக ராகுல் காந்தி பல்வேறு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கரூர் சம்பவத்திற்குப் பின்... முதல்வராக சாலை வலம் செல்லும் விஜய்!

கரூரில் முதல்வர் விஜய்! இன்றைய செய்திகள் ஜூலை 10 - நேரலை
கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!

125 கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்களை உடனே நிரப்புக! அன்புமணி வலியுறுத்தல்
விடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | July 12 முதல் 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஃபிபா: ஆரம்பமாகிறது காலிறுதிச் சுற்று! | FIFA | FIFA World Cup |

MK Stalin உடன் மீண்டும் பேச்சா? குழப்பும் Thirumavalavan



