

மும்பை: இந்திய வரலாற்றில் ஒரு கறையாக எமர்ஜென்ஸி காலம் உள்ளது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
மும்பையில் இன்று பாஜக தொண்டர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை விமரிசிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எமர்ஜென்ஸி நாளை கருப்பு தினமாக அனுசரிக்கவில்லை. நாட்டில் என்ன நடந்தது என்பதை இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். எமர்ஜென்ஸி காலத்தில் என்ன நடந்தது என்றோ, சுதந்திரம் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் என்றோ இளைஞர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.
அரசியலமைப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. நீதித்துறை பெரும் அச்சத்தில் இருந்துள்ளது. சட்டத்தைக் காப்பாற்ற பெரும் இன்னலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
ஒரு குடும்பத்தின் அதிகாரப் பசிக்காக ஒரு நாடே சிறைச்சாலையாக மாற்றப்படும் என்று மக்கள் நினைக்கவில்லை. ஒவ்வொருவரும் அச்சத்துடன் வாழ்ந்தனர் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.