ஸ்ரீநகர்: காஷ்மீரில் கடந்த வாரம் தனது துப்பாக்கியுடன் மாயமான சிறப்பு காவல் அதிகாரி ஒருவர், ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து விட்டார் என்று அந்த இயக்கம் தெரிவித்துள்ளது
காஷ்மீர் மாநில சிறப்பு போலீஸ் படையில் அதிகாரியாகப் பணியாற்றி வருபவர் இர்பான் அகமது. இவர் கடந்த செவ்வாய் கிழமை மாலை, தனது பணிக்கான ஏகே 47 ரக துப்பாக்கியுடன் மாயமாகினார். எங்கே சென்றார் என்று தகவல் தெரியாத நிலையில், அவரைத் தேடும் பணியை பாதுகாப்பு படைகள் தொடங்கியது.
இந்நிலையில் சிறப்பு காவல் அதிகாரி இர்பான் அகமது தங்களது ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து விட்டார் என்று அந்த இயக்கம் தெரிவித்துள்ளது
அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநில போலீசார் அனைவரும் தங்களுடைய பணியை விட்டுவிட்டு தங்களது இயக்கத்தில் இணைய வேண்டும் என்றும் அவ்வியக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அகஸ்தியா் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
வீட்டில் ரூ.5 லட்சம் நகைகள் திருட்டு போலீஸில் பெண் புகாா்

மீன்பிடி தடைக்காலம் நிறைவு! கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழக, புதுச்சேரி மீனவா்கள்!

தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



