தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

லாலு பிரசாத் யாதவின் மகன் அறிமுகமாகும் ஹிந்தித் திரைப்பட போஸ்டர் வெளியீடு 

பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் கதாநாயகனாக அறிமுகமாகும் ஹிந்தித் திரைப்படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஜூன் 2018, 9:43 am

பாட்னா: பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் கதாநாயகனாக அறிமுகமாகும் ஹிந்தித் திரைப்படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப். பிகாரின் முந்தைய கூட்டணி ஆட்சியின் பொழுது சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றியவர். திரைப்படத்துறையில் ஆர்வமுள்ள அவர் அப்பொழுதே போஜ்புரி மொழித் திரைப்படம் ஒன்றில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் தேஜ் பிரதாப் ஹிந்தியில் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் புதனன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  "ருத்ரா - தி அவதார்" என்று படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. போஸ்டரில் அவர் குளிர் கண்ணாடி அணிந்து கொண்டு தோன்றும் காட்சி இடம்பெற்றுள்ளது. அத்துடன் 'கம்மிங் சூன்' என்ற வாசகமும் காணப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.