மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

மத்திய அரசு அதிகாரிகள் பணியிடமாற்றம்

மத்திய அரசின் நிதி சேவை துறையின் இணைச் செயலராக மூத்த அதிகாரி பூஷண் குமார் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.

Updated On :29 ஜூன் 2018, 1:11 am IST

மத்திய அரசின் நிதி சேவை துறையின் இணைச் செயலராக மூத்த அதிகாரி பூஷண் குமார் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், இந்திய பொருளாதார சேவை (ஐஈஎஸ்) பிரிவில் 1993-ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த அதிகாரியாவார். நிதி சேவை துறையின் இணைச் செயலராக அடுத்த ஐந்து ஆண்டுகள் பூஷண் குமார் பதவி வகிப்பார் என்று மத்திய பணியாளர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நிதி சேவைகள் துறையின் இணை செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி லோக் ரஞ்சன் இருந்தார். அவர் தற்போது பணியாளர் நலத்துறைக்கு மாற்றப்படலாம் எனக் கருதப்படுகிறது. இதேபோன்று, முசோரியில் உள்ள லால் பகதூர் தேசிய நிர்வாகக் கல்விக் கழகத்தின் பொருளாதாரத் துறை பேராசிரியராக ஐஏஎஸ் அதிகாரி என்.கே.சுதன்சுவை மத்திய அரசு நியமித்துள்ளது.
மத்திய அமைச்சகத் துறையில் பணியாற்றி வந்த ஐஏஎஸ் அதிகாரி சுஷ்மா தைஷீடே-வை, நீதித்துறையின் இணைச் செயலாளராக நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி அமைச்சகத் துறையின் இணைச் செயலாளராக சுரபா எண்ட்லே நியமிக்கப்பட்டுள்ளார். சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறையின் இணைச் செயலராக கல்யாணி சதாவை பணியாளர் நலத் துறை நியமித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.