கவிஞர் கபீர் தாஸின் நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் வாக்கு வங்கி அரசியலில் பிரதமர் மோடி ஈடுபட்டு வருவது தெளிவாகத் தெரியவந்துள்ளது என்று பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை கூறியதாவது:
15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கபீர் தாஸின் 500-ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் பங்கேற்கிறார் என்பதற்காக பல கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டது. பிரம்மாண்ட வரவேற்பும், விளம்பரங்களும் அளிக்கப்பட்டன.
கபீர் தாஸின் பெயரில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் ஆராய்ச்சி நிறுவனம் அமைப்பதற்காக பிரதமர் அடிக்கல் நாட்டினார். ஆனால், அந்தத் திட்டத்தின் மதிப்பைக் காட்டிலும் அதிக தொகை பிரதமரின் வருகைக்காக செலவிடப்பட்டதுதான் முரண்பட்ட நடவடிக்கை.
இவை எல்லாம் மக்களை ஏமாற்றும் செயல்பாடுகள் என்பது அனைவருக்கும் தெரியும். கபீர் தாஸைப் பொருத்தவரை அவர் மக்கள் மனங்களில் நீக்கமற நிறைந்துள்ளார். அவரது பெயரைப் பயன்படுத்தி வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடும் நடவடிக்கைகளில் பிரதமர் இறங்கியிருக்கிறார். எதிர்வரும் மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு அவர் இவ்வாறு செயல்பட்டு வருகிறார் என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










