காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

விடைத்தாள் திருத்துவதில் குளறுபடி: 130 ஆசிரியர்களுக்கு எதிராக சிபிஎஸ்இ நடவடிக்கை

10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்களை திருத்தியதில் பல்வேறு தவறுகள் நேரிட்ட காரணத்தால் 130 ஆசிரியர்களுக்கு எதிராக மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடவடிக்கை

Updated On :30 ஜனவரி 2024, 9:35 pm IST

10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்களை திருத்தியதில் பல்வேறு தவறுகள் நேரிட்ட காரணத்தால் 130 ஆசிரியர்களுக்கு எதிராக மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
பொதுத் தேர்வு விடைத்தாள்களை திருத்தியதில் சில ஆசிரியர்கள் அலட்சியத்துடனும், கவனக்குறைவுடனும் செயல்பட்டது தெரியவந்துள்ளது. 
பிகார் மாநிலம், பாட்னாவில் அதிகபட்சமாக 45 ஆசிரியர்கள் அலட்சியத்துடன் விடைத்தாள்களை திருத்தியிருக்கிறார்கள். இதனால், பல மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். சிபிஎஸ்இ-க்கு இருக்கும் நற்பெயருக்கும் இவர்களால் களங்கம் ஏற்பட்டது.
தவறிழைத்த ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளிகளுக்கு அவர்களை பணியிடைநீக்கம் செய்யுமாறு உத்தரவு அனுப்பியிருக்கிறோம். 
சென்னையில் 14 ஆசிரியர்களும், அலாகாபாதில் 11 ஆசிரியர்கள், புவனேசுவரத்தில் 7 ஆசிரியர்கள், தில்லியில் 6 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தியபோது தவறிழைத்திருக்கின்றனர்.
பாட்னாவுக்கு அடுத்தபடியாக உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் 27 ஆசிரியர்கள் அலட்சியத்துடன் விடைத்தாள்களை திருத்தியது தெரியவந்துள்ளது. மொத்த மதிப்பெண்ணை கூட்டுவதில் பெரும்பாலும் தவறிழைக்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.