மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

பாதிரியார்கள் பாலியல் வன்கொடுமை விவகாரம்: புகாரை திரும்பப் பெற அழுத்தம்

பாலியல் புகாரை திரும்பப் பெறுமாறு மலங்கரா சிரியன் திருச்சபை அதிகாரிகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாக அந்தப் பெண்ணின் கணவர்தெரிவித்துள்ளார்.

News image
Updated On :28 ஜூன் 2018, 12:53 pm

கேரளாவின் கோட்டையம் பகுதியில் அமைந்துள்ள மலங்கரா தலைமை திருச்சபையில் பாவ மன்னிப்பு கேட்க வந்த பெண்ணிடம் 5 பாதிரியார்கள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், திருச்சபைகளின் செயலர் பிஜூ ஓமன் என்பவரிடம் அளித்த புகாரின் பேரில் அந்த 5 பாதிரியார்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. மேலும் கேரள காவல்துறையிலும் இதுதொடர்பாக அவர் புகார் அளித்தார்.

மேலும் இவ்விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கேரள காவல்துறை டிஜிபி-யிடம் தேசிய மகளிர் ஆணையம் புகார் மனு அளித்துள்ளது.

இந்நிலையில், பாலியல் புகாரை திரும்பப் பெறுமாறு மலங்கரா சிரியன் திருச்சபை அதிகாரிகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாக அந்தப் பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.