சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஜயேந்திரர் மறைவுக்கு எடியூரப்பா இரங்கல்

ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் மறைவுக்கு கர்நாடக பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா இரங்கல் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :1 மார்ச் 2018, 4:27 am

தினமணி

ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் மறைவுக்கு கர்நாடக பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது இரங்கல் செய்தியில்,  காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மறைந்த செய்தியை கேட்டு தீவிர துக்கமடைந்தேன்.  சனாதன மதத்தின் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.  

ஜயேந்திர சுவாமிகளின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  அவரது பக்தர்களின் ஒருவனாக,  சுவாமிகள் பாதங்களுக்கு எனது நமஸ்காரத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தென் இந்தியாவில் பிரசித்தி பெற்ற காமகோடி மடத்தின் சங்கராச்சார்யா பீடத்தின் மடாதிபதியாக திகழ்ந்த அவர்,  பல்வேறு சமூக நலப் பணிகள் செய்ததுடன்,  பக்தர்களுக்கு வழிகாட்டியாக விளங்கினார்.  

அவரது மறைவால் வாடும் பக்தர்கள் அனைவருக்கும் கடவுள் இதனைத் தாங்கும் சக்தியைக் கொடுக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் என அதில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.