நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆந்திர அமைச்சர்கள் ராஜிநாமா எதிரொலி: மத்திய அமைச்சரவையில் சுரேஷ் பிரபுவுக்கு கூடுதல் பொறுப்பு

ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி எம்.பி-க்கள் தங்கள் மத்திய அமைச்சரவைப் பதவியிலிருந்து விலகியதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :10 மார்ச் 2018, 9:34 am

Raghavendran

தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் உள்ள ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தர மத்திய அரசு மறுத்ததை அடுத்து, அக்கட்சியைச் சேர்ந்த இரு மத்திய அமைச்சர்களும் பதவியில் இருந்து விலகுவார்கள் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.

இதையடுத்து தில்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்த அசோக் கஜபதி ராஜு, ஒய்.எஸ். செளதரி ஆகியோர் தங்கள் ராஜிநாமா கடிதத்தை அளித்தனர். அதே நேரத்தில் ஆந்திர மாநில அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த இரு பாஜக அமைச்சர்களும் ராஜிநாமா செய்துவிட்டனர்.

இருப்பினும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வது என்று தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு முடிவெடுத்துள்ளார். 

இந்நிலையில், அசோக் கஜபதி ராஜு நிர்வகித்து வந்த விமானப் போக்குவரத்து அமைச்சரவையை மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு ஒதுக்குமாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி சிபாரிசு செய்தார். 

எனவே மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, விமானப் போக்குவரத்து அமைச்சரவையை இனி கூடுதலாக கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் மாளிகை அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.