தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!மேற்கு வங்கத்தை பாஜகவுக்கு பரிசளித்த ஞானேஷ் குமாருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்: ஒமர் அப்துல்லாமுதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளர் என்று சொல்வது தொண்டர்களின் ஆர்வமிகுதி: திருமாவளவன்கரப்பான்பூச்சி கட்சியை ராஜிநாமா கட்சி என மாற்றியாக வேண்டும்: மத்திய அமைச்சர்தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள்! பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!2 நாள்களில் 9 கொலைகள்! இனியும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்காமல்... உதயநிதி விமர்சனம்எதற்காகக் காத்திருக்கிறது ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் நிலையம்? மக்கள் வேதனைபோக்சோ வீரமணி வழக்கு! முதல்வர் விஜய், அமைச்சர்களை விசாரிக்க கோரி திமுக மனு!ஆபத்தில் ஜனநாயகம்; முழு வலிமையுடன் பாதுகாப்போம்! ராகுல் காந்திஞானேஷ் குமாரை பதவி நீக்க மனு: அடுத்த வாரம் விசாரணை! தலைமை நீதிபதி ஒப்புதல்!தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு!மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும்!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் மெஹுல் சோக்ஷி மேலும் ரூ.924 கோடி மோசடி: வெளியான அதிர்ச்சித் தகவல்! 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் மெஹுல் சோக்ஷி மேலும் ரூ.924 கோடி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக வங்கி நிர்வாகம் தற்பொழுது தகவல் தெரிவித்துள்ளது.  

Published On :

மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கியில் மெஹுல் சோக்ஷி மேலும் ரூ.924 கோடி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக வங்கி நிர்வாகம் தற்பொழுது தகவல் தெரிவித்துள்ளது.  

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை ஒன்றில் ரூ.11400 கோடி மதிப்பிலான பண மோசடி நடந்து உள்ளது கடந்த மாதம் 14-ஆம் தேதி கண்டறியப்பட்டது. மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி  நிரவ் மோடியின் கீதாஞ்சலி வைர விற்பனை நிறுவனம் இந்த மோசடியில் ஈடுபட்டு இருப்பதாக வங்கி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் இது தொடர்பாக நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெஹுல் சோக்ஷி இருவர் மீதும் சி.பி.ஐ.யிடமும் புகார் அளிக்கப்பட்டது.

சிபிஐ இதுதொடர்பாக வங்கி அதிகாரிகளையும் நிரவ் மோடியின் நிறுவன அலுவலர்கள் மூவரையும் கைது செய்துள்ளது. ஆனால் ஜனவரி மாத துவக்கத்திலேயே நிரவ் மோடி மற்றும் மெஹுல் சோக்ஷி வெளிநாட்டுக்கு குடும்பத்துடன் தப்பி ஓடியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு இந்திய விசாரணை முகமைகள் மூலம் நிரவ் மோடியை இந்தியா அழைத்து வரும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்துடன் பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு குறித்து சிறப்பு புலனய்வு குழு (எஸ்.ஐ.டி) அமைத்து விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் மெஹுல் சோக்ஷி மேலும் ரூ.924 கோடி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக வங்கி நிர்வாகம் தற்பொழுது தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செவ்வாயன்று நீதிமன்றத்துக்கு தாக்கல் செய்துள்ள அறிக்கை ஒன்றில் வங்கி நிர்வாகம் இதனைத் தெரிவித்துள்ளது.

இத்தனையும் சேர்த்து நிரவ் மோடி மற்றும் மெஹுல் சோக்ஷி இருவரும் மொத்தமாக ரூ. 13570 கோடி பணத்தினை பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து மோசடி செய்துள்ளார் என்பது தெரிய வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.