6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஈராக்கில் பலியான 39 இந்தியர்களின் உடல்கள் ஒரு வாரத்தில் இந்தியா கொண்டு வரப்படும்: சுஷ்மா உறுதி  

ஈராக்கில் பலியான 39 இந்தியர்களின் உடல்கள் ஒரு வாரத்தில் இந்தியா கொண்டு வரப்படும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதியளித்துள்ளார்.

News image
Updated On :26 மார்ச் 2018, 4:23 pm

DIN

புதுதில்லி: ஈராக்கில் பலியான 39 இந்தியர்களின் உடல்கள் ஒரு வாரத்தில் இந்தியா கொண்டு வரப்படும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதியளித்துள்ளார்.

ஈராக்கின் மொசூல் நகரை கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைப்பற்றினர். அப்பகுதியில் இந்தியாவின் பஞ்சாப், இமாசலபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இருந்து மருத்துவமனை கட்டுமான பணிக்காக அங்கு சென்றிருந்த 40 பேர் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து தப்பிக்க முயன்றனர்.

ஆனால் அவர்கள் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டனர். இவர்களின் கதி என்ன ஆனது என்பது உடனடியாக தெரிய வரவில்லை. அப்போதே, இறந்து விட்டதாக வெளியான தகவலை மத்திய அரசு நிராகரித்து விட்டது.  இந்த சூழலில் கடந்த வாரம்  நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், ”ஈராக்கில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர்கள் அனைவரும் கொல்லப்பட்டதாக தெரிவித்தார்.

தற்பொழுது ஈராக்கில் பலியான 39 இந்தியர்களின் உடல்கள் ஒரு வாரத்தில் இந்தியா கொண்டு வரப்படும் என்று சுஷ்மா சுவராஜ் உறுதியளித்துள்ளார். மேலும், மத்திய அமைச்சர் விகே சிங், ஈராக் சென்று இதற்கான அனைத்து பணிகளையும் கண்காணிக்க உள்ளதாகவும், தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.