புதுதில்லி: எல்லா இடத்திலும் கசிவுகள் ஏற்படும் அளவுக்கு பிரதமர் மோடி வலுவிழந்த காவல்காரராக உள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த சிபிஎஸ்இ தேர்வுகளில் 10-ஆம் மற்றும் 12-ஆம் வகுப்புக்களுக்கான கேள்வித்தாள்கள் முன்கூட்டியே வெளியாகின. தற்பொழுது மறுதேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதேபோல் கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி நடைபெற்ற மத்திய பணியாளர் தேர்வு வாரியத்தின் (எஸ்.எஸ்.சி) பட்டதாரிகளுக்கான ஒருங்கிணைந்த இரண்டாம் கட்டத் தேர்வு வினாத்தாள்கள் முன்கூட்டியே கசிந்தன.
அதேபோல் நேற்று முன்தினம் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் வாரியத்துக்கு முன்னதாக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவால் வெளியிடப்பட்டன.
இந்நிலையில் எல்லா இடத்திலும் கசிவுகள் ஏற்படும் அளவுக்கு பிரதமர் மோடி வலுவிழந்த காவல்காரராக உள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
எத்தனை கசிவுகள்? தகவல் கசிவு! ஆதார் விபரங்கள் கசிவு! எஸ்.எஸ்.சி வினாத்தாள்கள் கசிவு! தேர்தல் தேதி கசிவு! எல்லா இடத்திலும் கசிவுகள் உள்ளது. பிரதமர் மோடி வலுவிழந்த காவல்காரராக உள்ளார்.
இவ்வாறு அவர் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிக்கிம் மாநிலத்தில் மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவளித்து பேரணி! 25,000 பெண்கள் பங்கேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? - இந்தியன் வங்கியின் துணை நிறுவனத்தில் வேலை!

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உத்தரவாதம் போதாது! கனிமொழி

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


