எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

முகநூலை திருமண சேவைத்தளமாக மாற்றிய கேரளத்துப் பெண் 

பிரபல சமூக வலைத்தளமான முகநூலை கேரளத்துப் பெண் ஒருவர் திருமண சேவைத்தளமாக மாற்றியுள்ள சம்பவம் அனைவருக்கும் ஆச்சர்யத்தினை ஏற்படுத்தியுள்ளது  

News image
Updated On :30 ஜனவரி 2024, 6:28 pm IST

திருவனந்தபுரம்: பிரபல சமூக வலைத்தளமான முகநூலை கேரளத்துப் பெண் ஒருவர் திருமண சேவைத்தளமாக மாற்றியுள்ள சம்பவம் அனைவருக்கும் ஆச்சர்யத்தினை ஏற்படுத்தியுள்ளது  

உலகின் பிரபல சமூக வலைத்தளங்களுள் ஒன்றாக முகநூல் விளங்குகிறது, இதன்மூலம் நாம் நமது நண்பர்களுடன் தொடர்பில் இருக்கலாம். அதனைப் பயன்படுத்தி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் தகவல்களை அறிந்து கொள்ளல் உள்ளிட்ட விஷயங்களை அனைவரும் செய்து வருகிறாரகள்.

இந்நிலையில் முகநூலை கேரளத்துப் பெண் ஒருவர் திருமண சேவைத்தளமாக மாற்றியுள்ள சம்பவம் அனைவருக்கும் ஆச்சர்யத்தினை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் மலப்புரத்தில்  வசித்து வருபவர் ஜோதி, இவர் தனது முகநூல் பக்கத்தில் கடந்த மாதம் ஏப்ரல் 26-ஆம் தேதி அன்று ஒரு பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

எனது பெயர் ஜோதி. வயது 28. எனக்கு பெற்றோர் கிடையாது. பேஷன் டிசைனிங் படித்து முடித்துள்ள எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணை வேண்டும். நண்பர்களே, உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் என்னைத்  தொடர்பு கொண்டு தெரியப்படுத்துங்கள்.

எனக்கு பொதுவாகவே ஜோதிடம் மற்றும் ஜாதி உள்ளிட்ட விஷ்யங்களில் நமபிக்கை இல்லை. இவைகளை நான் பார்ப்பதூவும் இல்லை.

இவ்வாறு தெரிவித்துள்ள இவர் தனது பதிவில் தனது அண்ணன் மற்றும் சகோதரி ஆகியோரின் படிப்பு, அவர்கள் செய்யும் வேலை முதலான விஷயங்களையும் குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த திருமண வேண்டுகோள் பதிவானது இதுவரை 6,000 தடவைகளுக்கு மேல் பகிரப்பட்டுள்ளது. 

அத்துடன் முகநூல் நிறுவனரான மார்க் ஸூக்கர்பெர்க்குக்கும் ஜோதி ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் என்னைப் போன்றவர்கள்  தங்களது வாழ்க்கை துணையை தேடிக்கொள்வதற்கு உதவியாக நீங்கள் 'பேஸ்புக் மேட்ரிமோனி' என்ற வசதியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்' என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.