எல்லாவற்றுக்கும் காரணமான நரேந்திர மோடிக்கு ஓட்டு: காங்கிரஸ் வேட்பாளரை அதிர வைத்த சித்தராமையா   

எல்லாவற்றுக்கும் காரணமான நரேந்திர மோடிக்குதான் ஓட்டு என்று கர்நாடக தேர்தல் பிரசாரத்தின் பொழுது முதல்வர் சித்தராமையா வாய் தவறிக் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
எல்லாவற்றுக்கும் காரணமான நரேந்திர மோடிக்கு ஓட்டு: காங்கிரஸ் வேட்பாளரை அதிர வைத்த சித்தராமையா   
Published on
Updated on
1 min read

மாண்டியா: எல்லாவற்றுக்கும் காரணமான நரேந்திர மோடிக்குதான் ஓட்டு என்று கர்நாடக தேர்தல் பிரசாரத்தின் பொழுது முதல்வர் சித்தராமையா வாய் தவறிக் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடகாவில் வரும் 12-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தொடர்ச்சியாக தேர்தல் பிரசார கூட்டங்களில் பிரதமர் மோடி பேசி வருகிறார்.

உடல்நலக் குறைபாடால் கடந்த இரு ஆண்டுகளாக பரபரப்பு அரசியலிலிருந்து ஒதுங்கி இருந்த சோனியா காந்தி கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பிஜய்ப்பூர் பகுதியின் விஜயபுராவில் கூட்டம் ஒன்றில் செவ்வாயன்று பங்கேற்றார்.

இந்நிலையில் எல்லாவற்றுக்கும் காரணமான நரேந்திர மோடிக்குதான் ஓட்டு என்று கர்நாடக தேர்தல் பிரசாரத்தின் பொழுது முதல்வர் சித்தராமையா வாய் தவறிக் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் மலவள்ளி தொகுதி எம்.எல்.ஏ.வும், தற்போது காங்கிரஸ் வேட்பாளராக அங்கு போட்டியிடும் நரேந்திரசாமிக்கு ஆதரவாக முதல்வர் சித்தராமையா அத்தொகுதியில் செவ்வாயன்று  பிரசாரம் செய்தார்.

அப்பொழுது காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகளையும், எம்.எல்.ஏ.வின் பணியையும் புகழ்ந்து பட்டியலிட்டு பேசிய அவர், 'இப்போது அனைத்து கிராமங்களிலும் சாலைப்பணிகள், குடிநீர் வசதி, வீடு கட்டும் பணிகள், அனைத்தும் நமக்கு சாத்தியமானது என்றால் நரேந்திர மோடியாலும் காங்கிரசாலும்தான்' என்று குறிப்பிட்டார்.

பிரசாரங்களின் பொழுது எப்போதும் மோடியையே விமர்சனம் செய்து பேசி வரும் சித்தராமையா அதே நினைவில் நாக்குத் தவறி நரேந்திர சாமிக்கு பதிலாக நரேந்திர மோடி என்று கூறி விட்டார். தனது தவறை உணர்ந்த அவர் உடனே, சாரி! சாரி!! நரேந்திர சாமிக்கு ஓட்டு போடுங்கள் என்று திருத்திக் கொண்டார்.

இதன் காரணமாக அங்கு சில நொடிகள் சலசலப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com