அமைச்சரவை மாற்றத்துக்கு ஆயத்தமாகிறது மோடி அரசு!சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைபத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடுசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசெப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

ராஜ்நாத் சிங்குடன் அலிகர் பல்கலை துணைவேந்தர் சந்திப்பு

உத்தரப் பிரதேச மாநிலம், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக துணைவேந்தர் தாரிக் மன்சூர், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.

Updated On :30 ஜனவரி 2024, 6:30 pm IST

உத்தரப் பிரதேச மாநிலம், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக துணைவேந்தர் தாரிக் மன்சூர், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.
அலிகர் பல்கலைக்கழக மாணவர் சங்க அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த, பாகிஸ்தான் நிறுவனர் முகமது அலி ஜின்னாவின் படம் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, மாணவர்களிடையே அசாதாரண சூழல் நிலவுகின்ற சூழலில் துணைவேந்தர் மற்றும் உள்துறை அமைச்சர் இடையிலான சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த சந்திப்பு தொடர்பாக, நம்பகுத்தந்த அதிகாரிகளிடம் கிடைத்த ரகசிய தகவல் என்னவெனில், பல்கலைக்கழகத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று துணைவேந்தரிடம், ராஜ்நாத் சிங் உறுதியளித்தார் என்று தெரியவருகிறது.
எனினும், இது வெகுநாள்களுக்கு முன்பே திட்டமிடப்பட்ட சந்திப்பு என்றும், இதில் ஜின்னா விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தப்படவில்லை என்றும் துணைவேந்தர் தாரிக் மன்சூர் தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
மத்திய அரசுப் பணிகளுக்கு மாணவர்களை தேர்வு செய்யும் விதமாக அலிகர் பல்கலைக்கழகத்துக்கு மத்திய அரசின் அதிகாரிகளை அனுப்பி வைக்குமாறு உள்துறை அமைச்சரிடம் கேட்டுக் கொண்டேன்.
பல்கலைக்கழக மாணவர் சங்க அலுவலகத்தில் 1938-ஆம் ஆண்டில் இருந்தே ஜின்னாவின் படம் இடம்பெற்றிருந்தது. ஆதலால், இது ஒரு பிரச்னையல்ல என்றார் மன்சூர். முன்னதாக, ஜின்னாவின் படத்தை அகற்ற வேண்டும் என துணைவேந்தர் மன்சூருக்கு பாஜக எம்பி சதீஷ் கெளதம் கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து, வலதுசாரி மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் ஜின்னாவின் படத்தை அதிரடியாக அகற்றினர். இதனால், மாணவர்களிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், தொடர்ந்து அசாதாரணமான சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக தேர்வுகள் மே 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.