8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

மகன் திருமணம்: லாலுவுக்கு 5 நாள் பரோல்

கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் தலைவர் லாலு பிரசாத்துக்கு, மகன் தேஜ் பிரதாப் யாதவின் திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக

Published On :30 ஜனவரி 2024, 6:30 pm IST

கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் தலைவர் லாலு பிரசாத்துக்கு, மகன் தேஜ் பிரதாப் யாதவின் திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக 5 நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.
பிகார் எம்எல்ஏவும், அந்த மாநில முன்னாள் அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் சந்திரிகா ராயின் மகள் ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.
இவர்களின் திருமணம் வரும் 12-ஆம் தேதி பிகார் தலைநகர் பாட்னாவில் நடைபெறவுள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற இவர்களின் நிச்சயதார்த்த நிகழ்விலும் லாலுவால் பங்கேற்க இயலவில்லை. இந்நிலையில், திருமணத்தில் பங்கேற்பதற்கு 5 நாள் பரோல் கோரி அவரது சார்பில் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. அவருக்கு 10-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை பரோலில் செல்ல புதன்கிழமை அனுமதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து, அவர் ராஞ்சி சிறையிலிருந்து புதன்கிழமை மாலை விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கிருந்து பாட்னாவுக்கு அவரை ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்ல கட்சியினர் திட்டமிட்டு வருகின்றனர்.
சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி: இதனிடையே, ரயில்வே ஹோட்டல்கள் ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்துள்ள குற்றசாட்டில் லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோருக்கு எதிராக அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள 3 வாரங்கள் வரை சிபிஐ அதிகாரிகளுக்கு தில்லி உயர் நீதிமன்றம் கால அவகாசம் அளித்தது. இந்த வழக்கில் அவர்களுக்கு எதிராக ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.