பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

வரி வருவாய் பகிர்வு: குடியரசுத் தலைவரைச் சந்திக்க பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்கள் திட்டம்

மாநிலங்களுக்கு வரி வருவாயைப் பகிர்ந்தளிக்கும் விவகாரம் தொடர்பாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து முறையிட பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளதாகத்

Published On :30 ஜனவரி 2024, 6:30 pm IST

மாநிலங்களுக்கு வரி வருவாயைப் பகிர்ந்தளிக்கும் விவகாரம் தொடர்பாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து முறையிட பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக, எதிர்க்கட்சி வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்ததாவது:
கடந்த 1971-ஆம் ஆண்டின் மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு, மாநிலங்களுக்கு வரி வருவாய் பகிர்ந்தளிக்கப்ட்டு வருகிறது. ஆனால், 2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகையை அடிப்படையாகக் கொண்டு, மாநிலங்களுக்கு வரி வருவாயைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று 15-ஆவது நிதிக் குழு பரிந்துரை செய்துள்ளது. இதனால், மாநிலங்களுக்கு கோடிக்கணக்கில் நிதி இழப்பு ஏற்படும். அரசமைப்புச் சட்டப்படி, குடியரசுத் தலைவரால் மட்டுமே இந்தப் பரிந்துரைகளில் திருத்தம் மேற்கொள்ள முடியும். எனவே, இதுதொடர்பாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்துப் பேசுவதற்கு பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநில அரசுகளில் முதன்மையாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இது தொடர்பாக, பிரதமர் மோடிக்கு கடந்த மாதமே ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், அவர் கூறியிருந்ததாவது:
சமூக-பொருளாதாரத் திட்டங்கள், குடும்ப நலத் திட்டங்கள் ஆகியவற்றை சிறப்பாக அமல்படுத்தும் மாநிலங்களை ஊக்குவிக்கும் வகையில் முந்தைய நிதிக் குழுக்களின் பரிந்துரைகள் அமைந்திருந்தன. ஆனால், 15-ஆவது நிதிக் குழுவின் பரிந்துரைக்கு, அதற்கு நேர் எதிராக உள்ளது. 1971-ஆம் ஆண்டுக்கு பதிலாக 2011 மக்கள்தொகைப்படி வரி வருவாயைப் பகிர்ந்தளித்தால் மேற்கு வங்கத்துக்கு மட்டும் ரூ.35,000 கோடி இழப்பு ஏற்படும். அதைக் கருத்தில் கொண்டு பழைய நடைமுறைப்படியே வரி வருவாய் கணக்கீட்டை மேற்கொள்ளுமாறு நிதிக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும். இந்த விவகாரத்தில் நிதிக் குழுவின் வரைவுத் திட்டத்தை மறு ஆய்வுக்குட்படுத்தி மாநிலங்களுக்கு உரிய நீதியை பிரதமர் பெற்றுத் தர வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் மம்தா வலியுறுத்தியிருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.