சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

பிஎன்பி வங்கி நிதி மோசடி: நீதிமன்றத்தில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் 

பிஎன்பி வங்கி நிதி மோசடி விவகாரத்தில் அந்த வங்கியின் முன்னாள் தலைவர் உள்ளிட்டோரை குற்றவாளிகளாக சி.பி.ஐ. திங்களன்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:03 pm

DIN

புதுதில்லி: பிஎன்பி வங்கி நிதி மோசடி விவகாரத்தில் அந்த வங்கியின் முன்னாள் தலைவர் உள்ளிட்டோரை குற்றவாளிகளாக சி.பி.ஐ. திங்களன்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

பஞ்சாப் தேசிய வங்கியில் பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் அவரது உறவினரான  மெஹுல் சோக்ஷி உள்ளிட்டோர் ரூ.16 ஆயிரம் கோடி அளவிற்கு நிதி முறைகேடு செய்துள்ளதாக சி.பி.ஐ.யிடம் அந்த வங்கி புகார் அளித்தது.  அதன் அடிப்படையில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கில் கடந்த 2015ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை வங்கியின் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக உஷா அனந்த சுப்ரமணியனிடம் சி.பி.ஐ. சமீபத்தில் விசாரணை நடத்தியது. 

இந்நிலையில் பிஎன்பி வங்கி நிதி மோசடி விவகாரத்தில் அந்த வங்கியின் முன்னாள் தலைவர் உள்ளிட்டோரை குற்றவாளிகளாக சி.பி.ஐ. திங்களன்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இந்த குற்றப்பத்திரிகையில் பஞ்சாப் தேசிய வங்கியின் செயல் இயக்குநர்கள் கே.வி. பிரம்மாஜி ராவ் மற்றும் சஞ்சீவ் சரண் மற்றும் பொது மேலாளர் (சர்வதேச நடவடிக்கைகள்) நேஹால் ஆஹாத் ஆகியோரது பெயர்களும் சேர்க்கப்பட்டு உள்ளன.

அத்துடன்  இந்த பண மோசடியில் நீரவ் மோடி, அவரது சகோதரர் நிஷால் மோடி மற்றும் நீரவ் மோடி நிறுவனத்தின் செயல் அதிகாரி சுபாஷ் பரப் ஆகியோரது பங்கு பற்றியும் சி.பி.ஐ. தகவல் தெரிவித்து உள்ளது. 

ஆயினும் வழக்கில் தொடர்புடைய மெகுல் சோக்ஷியின் பங்கு பற்றி முதன்மை குற்றப்பத்திரிகைகயில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.