வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மிக மிக ஆடம்பரமாக நடந்து முடிந்த கர்நாடக தேர்தல் திருவிழா: ஒரு பகீர் ஆய்வு

கடந்த சனிக்கிழமை நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்தான், இந்தியாவில் நடந்த தேர்தல்களிலேயே மிக மிக அதிகளவில் செலவிடப்பட்ட தேர்தல் என்ற பெருமையை பிடித்துள்ளது.

News image
Updated On :14 மே 2018, 10:16 am


புது தில்லி: கடந்த சனிக்கிழமை நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்தான், இந்தியாவில் நடந்த தேர்தல்களிலேயே மிக மிக அதிகளவில் செலவிடப்பட்ட தேர்தல் என்ற பெருமையை பிடித்துள்ளது.

தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிகளும் சரி, கட்சி வேட்பாளர்களும் சரி, தேர்தல் பிரசாரத்துக்காக பணத்தை வாரி இரைத்துள்ளனர்.

தி சென்ட்ரி ஃபார் மீடியா ஸ்டடிஸ் என்ற லாப நோக்கமற்ற அமைப்பு நடத்திய நீண்ட ஆய்வின் முடிவுகள்  வெளியிடப்பட்டுள்ளது. பொதுவாக பணம் கொட்டியது என்பதை பண மழை பெய்தது என்று சொல்லுவோம். ஆனால் இந்த தேர்தல், பணச் சூறாவளி என வர்ணிக்கப்பட்டுள்ளது.

சரி, அப்படி எவ்வளவு பணம்தான் இந்த தேர்தலில் செலவிடப்பட்டிருக்கும் என்று கேட்டால், கர்நாடக தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் என ஒட்டுமொத்தமாக ரூ.9,500 கோடி முதல் 10,500 கோடி வரை செலவிட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2013 கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் செலவிடப்பட்ட தொகையை விட இரண்டு மடங்கு அதிகம்.

இதில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், பிரதமர் மோடியின் பிரசாரச் செலவுகள் இதில் இடம்பெறவில்லை என்பதே.

கடந்த 20 ஆண்டுகால வரலாறுகளைப் புரட்டிப் பார்த்திருக்கும் இந்த அமைப்பு, இந்தியாவின் இதர மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களோடு ஒப்பிடுகையில் ஒவ்வொரு முறையும் கர்நாடக பேரவைத் தேர்தல் செலவு அதிகமாகவே இருந்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டில், தேர்தல் நேரத்தில் பணத்தை வாரி இரைப்பதில் கர்நாடக மாநிலத்தைத் தொடர்ந்து, ஆந்திரம், தமிழகம் இடம்பிடித்துள்ளது.

இதனை அடிப்படையாக வைத்துக் கணக்கிட்டதில் வரும் 2019 மக்களவைத் தேர்தலில் சுமாராக ரூ.50 ஆயிரம் கோடி முதல் 60 ஆயிரம் கோடி வரை செலவிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2014 தேர்தலின் போது ரூ.30 ஆயிரம் கோடிகள்தான் செலவிடப்பட்டது.

மே 12ம் தேதி கர்நாடக சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் 15ம் தேதி அதாவது நாளை எண்ணப்பட உள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.