குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

ஓய்வூதியம் பெறுவதற்கு ஆதார் கட்டாயமில்லை - மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

புதுதில்லி: மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வூதியத்தை பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயமில்லை என்று மத்திய பணியாளர் நலன் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :15 மே 2018, 4:18 pm IST

ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் துறையின் 30வது கூட்டம் தில்லியில் இன்று (செவ்வாய்கிழமை) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய தொழிலாளர் நலன் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஓய்வூதியம் பெறுவதற்கு ஆதார் கட்டாயம் இல்லை என்று தெரிவித்தார். 

"ஆதார் என்பது, உயிர்வாழ் சான்றிதழை வங்கிக்கு செல்லாமலே சமர்ப்பிப்பதற்கான ஒரு கூடுதல் தொழில்நுட்ப வசதி. ஆகவே, அரசு ஊழியர்கள் தங்களது ஓய்வூதியத்தை பெறுவதற்கு ஆதார் கட்டாயமில்லை" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்கள் தங்களது வங்கிக் கணக்கோடு ஆதாரை இணைக்காததால் ஓய்வூதியம் பெறுவதற்கு சிரமப்படுவதாக தகவல்கள் வந்து கொண்டிருந்தன. இந்த நிலையில், மத்திய இணை அமைச்சர் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.