சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

பெட்ரோல் மீதான வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும்: நீதி ஆயோக் துணைத் தலைவர் வலியுறுத்தல்

பெட்ரோல் மீதான வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்று நீதி ஆயோக் (மத்திய கொள்கைக் குழு) துணைத் தலைவர் ராஜீவ் குமார் வியாழக்கிழமை தெரிவித்தார்.

Updated On :25 மே 2018, 1:37 am IST

பெட்ரோல் மீதான வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்று நீதி ஆயோக் (மத்திய கொள்கைக் குழு) துணைத் தலைவர் ராஜீவ் குமார் வியாழக்கிழமை தெரிவித்தார்.
சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. பெட்ரோல் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு லிட்டர் 80 ரூபாயைத் தாண்டியுள்ளது. டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.72.35 ஆக உள்ளது. இது பொதுமக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெட்ரோலியப் பொருள்கள் மீது மத்திய அரசு விதித்து வரும் கலால் வரியைக் குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், இந்தக் கோரிக்கையை ஏற்க மத்திய அரசு மறுத்து வருகிறது.
இந்நிலையில், தில்லியில் வியாழக்கிழமை பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த நீதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கூறியதாவது:
பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க அதன் மீதான வரியைக் குறைக்க வேண்டும் என்பது ஏற்புடையதுதான். பெட்ரோலியப் பொருள்கள் மீது மத்திய அரசு மட்டுமின்றி மாநில அரசுகளும் வரி விதித்து வருகின்றன. வரி குறைப்பு விஷயத்தில் மத்திய அரசை விட மாநில அரசுதான் கூடுதல் பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். நிதிப் பற்றாக்குறையை குறைக்கும் இலக்குடன் மத்திய அரசு செயல்பட்டு வரும் நிலையில், வரியைக் குறைத்தால் அந்த இலக்குகளை எட்டுவதில் பிரச்னை ஏற்படும். இதனால், சர்வதேச அளவில் இந்தியா சில சிக்கல்களை சந்திக்கவும் நேரிடும்.
எனவே, மாநில அரசுகள்தான் பெட்ரோலியப் பொருள் மீதான வரியைக் குறைக்க வேண்டும். அதே நேரத்தில், பெட்ரோலியப் பொருள்கள் மீதான கூடுதல் கலால் வரியை குறைக்க மத்திய அரசு பரிசீலிக்கலாம். பெட்ரோல் மட்டுமல்லாது, மின்சாரத்தையும் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பில் கொண்டு வர வேண்டும் என்பதுதான் எனது கருத்து என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.