குமாரசாமியை முதல்வராக்க வற்புறுத்தியதே காங்கிரஸ்தான்: தேவே கவுட விளக்கம் 

குமாரசாமியை முதல்வராக்க வற்புறுத்தியதே காங்கிரஸ் தான் என்று மதச் சார்பற்ற ஜனதா தள தலைவர் தேவே கவுட விளக்கம் அளித்துள்ளார்.
குமாரசாமியை முதல்வராக்க வற்புறுத்தியதே காங்கிரஸ்தான்: தேவே கவுட விளக்கம் 
Updated on
1 min read

பெங்களூரு: குமாரசாமியை முதல்வராக்க வற்புறுத்தியதே காங்கிரஸ் தான் என்று மதச் சார்பற்ற ஜனதா தள தலைவர் தேவே கவுட விளக்கம் அளித்துள்ளார்.

கர்நாடகத்தில் காங்கிரஸ் -  மதச் சார்பற்ற ஜனதா தள கூட்டணி சார்பாக குமாரசாமி முதல்வராக சமீபத்தில்  பதவியேற்றார். பதவியேற்ற 24 மணி நேரத்தில் ரூபாய் 53 ஆயிரம் கோடி மதிப்பிலான விவசாயக் கடனைகளை தள்ளுபடி செய்வதாக குமாரசாமி அறிவித்திருந்தார். ஆனால் உடனடியாக அவ்வாறு செய்ய இயலவில்லை. அத்துடன் அமைச்சரவையில் இலாகாக்கள் ஒதுக்கீடு தொடர்பாகவும் காங்கிரஸ் மற்றும் மஜத  இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் குமாரசாமியை முதல்வராக்க வற்புறுத்தியதே காங்கிரஸ் தான் என்று மதச் சார்பற்ற ஜனதா தள தலைவர் தேவே கவுட விளக்கம் அளித்துள்ளார்.

பெங்களூருவில் அவர் திங்களன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:  

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பிளவுபட்ட தேர்தல் முடிவுகள் வந்தவுடன் காங்கிரஸ் தலைமையிலான அரசை ஆதரிப்பது என்று நான் முடிவெடுத்தேன். அப்பொழுது காங்கிரசின் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத் மற்றும் அசோக் கெலாட் ஆகியோருடன் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நான் ஆலோசனை செய்தேன்.அப்பொழுது காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமையவதில் எனக்கு ஒன்றும் பிரச்னை இல்லையென்று தெரித்தேன். ஆனால் குமாரசாமியை மாநில முதல்வராக்குவது என்ற முடிவு காங்கிரஸ் மேலிடத்தின் முழுமையான ஆதரவுடன் எடுக்கப்பட்ட ஒன்று என்று அவர்கள் என்னிடம் தெரிவித்தனர்.

விவசாயிகள் கடன் தள்ளுபடி தொடர்பாக நாங்கள் எப்படி தனியாக முடிவு எடுப்பது? 37 எம்.எல்.ஏக்களை வைத்திருக்கும் நாங்கள் மற்றொரு கட்சியின் ஆதரவுடன்தான் ஆட்சி செய்கிறோம். எனவே அவர்களது திட்டங்களை செயல்படுத்த வேண்டியுள்ளது. அவர்களது ஆதரவு இல்லாமல் இது மிகவும் கடினமான ஒன்றாகும்.

இத்தகைய சூழ்நிலையில்தான் தேவைப்பட்டால் நான் ராஜிநாமா செய்து விடுவதாக குமாரசாமி கூறியுள்ளார்.அவர் காங்கிரசின் விருப்பப்படி ஆட்சியில் இருக்கிறாரே ஒழிய, ஆறரைக் கோடி மக்களின் விருப்பத்தினால் அல்ல. அவர் தன்னை "சூழ்நிலைகளின் குழந்தை' என்று அழைக்கிறார்.

மஜத தேர்தல் வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றுவது என்பது இனி காங்கிரஸ் கையில்தான் உள்ளது.காங்கிரஸ் ஒரு பெரிய கட்சி. நாங்கள் சிறிய ஒரு கூட்டணி கட்சி. நாங்கள் அதிகாரத்தைக் கோரவில்லை .அவர்கள்தான் எங்களைத் தேடி வந்தனர். இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை. நாங்கள் அதிகாரத்தின் பின்னால் செல்கிறவர்கள் அல்ல.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com