அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

இரண்டு வயது பெண் குழந்தையை தின்று தீர்த்த தெரு நாய்க் கூட்டம்

இரண்டு வயது பெண் குழந்தை ஒன்றை தெரு நாய்க் கூட்டம் சேர்ந்து தின்று தீர்த்த நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

News image
Updated On :30 மே 2018, 11:06 am

காசியாபாத்: இரண்டு வயது பெண் குழந்தை ஒன்றை தெரு நாய்க் கூட்டம் சேர்ந்து தின்று தீர்த்த நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் காசியாபாத் மாவட்டத்தில்தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள மோடிநகர் பகுதியில் கோவிந்த் நகர் என்றொரு இடம் உள்ளது. அங்குள்ள பீம் நகர் குடியிருப்பு பகுதியில் திங்கள் இரவு இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

அங்கு விளையாடிக் கொண்டிருந்த பெண் குழந்தையை சூழ்ந்து கொண்ட தெரு நாய்கள் கூட்டம், அதைக் கடித்து அருகில் உள்ள கரும்பு வயல் ஒன்றுக்கு இழுத்துச் சென்றுள்ளது. அங்கு வைத்து குழந்தையை அனைத்து நாய்களும் சேர்ந்து தின்று தீர்த்துள்ளன.

பின்னர் சம்பவம் பற்றித் தகவல் அறிந்த பகுதிவாசிகள் ஒன்று கூடி. மோடிநகர் நகராட்சிக்கு எதிராக ஆத்திரத்துடன் கோஷங்கள் எழுப்பினர்.       

அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அதன்படி பல நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளதாகவும்,  மோடி நகர் மண்டல துணை நீதிபதி பவன் அகர்வால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.