மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு சென்றார் மோடி
கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு சென்றார்.


கிழக்கு ஆசிய நாடுகளுக்கு 5 நாள் பயணம் மேற்கொண்டுள்ள மோடி, முதல் கட்டமாக செவ்வாய்கிழமை இரவு இந்தோனேஷியாவுக்கு சென்றார். அங்கு தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள அதிபர் மாளிகையில் அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோதோவை சந்தித்துப் பேசினார்.
அப்போது இந்தியா - இந்தோனேஷியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்பட 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர், அங்கு பட்டம் கண்காட்சி, மசூதி போன்றவற்றை பார்வையிட்டு அங்கிருந்து மலேசியாவுக்கு சென்றார்.
மலேசியாவில் புதிதாக பதவியேற்ற பிரதமர் மகதிர் முகமதுவை சந்தித்து மோடி பேசினார். அந்நாட்டின் துணை பிரதமர் வான் அஸிஸா வான் இஸ்மாயிலையும் சந்தித்து பேசினார்.
இதைத்தொடர்ந்து, அவர் சிங்கப்பூருக்கு சென்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...