கர்நாடகத்தில் நடைபெற்ற 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் மாநிலத்தின் 5 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் செவ்வாய்க்கிழமை (நவ.6) எண்ணப்படுகின்றன.
கர்நாடக அரசியலில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை கிளப்பியுள்ள 3 மக்களவைத் தொகுதிகள், 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நவ. 3-ஆம் தேதி நடந்துமுடிந்தது. காங்கிரஸ்-மஜத கூட்டணி மற்றும் பாஜக கட்சிகளிடையே இருமுனை போட்டி நிலவிய இடைத்தேர்தலில் 65 சத வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.
களப்போட்டி: பெல்லாரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக வி.எஸ். உக்ரப்பா, பாஜக வேட்பாளராக ஜே. சாந்தா, சிவமொக்கா மக்களவைத் தொகுதியில் மஜத வேட்பாளராக மதுபங்காரப்பா, பாஜக வேட்பாளராக பி.ஒய். ராகவேந்திரா, மண்டியா மக்களவைத் தொகுதியில் மஜத வேட்பாளராக சிவராமேகெளடா, பாஜக வேட்பாளராக சித்தராமையா, ஜம்கண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஆனந்த்நியாமகெளடா, பாஜக வேட்பாளராக ஸ்ரீகாந்த் குல்கர்னி, ராமநகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் மஜத வேட்பாளராக அனிதா குமாரசாமி, பாஜக வேட்பாளராக தேர்தலில் இருந்து விலகிய எல். சந்திரசேகர் (வாக்குச்சீட்டில் இவரது பெயர் இடம்பெற்றிருந்தது) உள்ளிட்ட 31 பேர் போட்டியில் இருந்தனர்.
வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் மண்டியா, ராமநகரம் தொகுதிகளில் மஜதவும், சிவமொக்கா, பெல்லாரி, ஜம்கண்டி தொகுதிகளில் பாஜகவும் வெற்றி பெறும் என்று தெரியவந்துள்ளது.
வாக்கு எண்ணிக்கை: 5 தொகுதிகளுக்காக 5 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மையங்கள்: பெல்லாரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் பெல்லாரியில் உள்ள ராவ் பகதூர் ஒய் மகாபலேஸ்வரப்பா பொறியியல் கல்லூரியிலும், சிவமொக்காவில் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் சிவமொக்காவில் உள்ள சாயாத்ரி கலைக் கல்லூரியிலும், மண்டியா மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் மண்டியாவில் உள்ள அரசு தன்னாட்சி கல்லூரியிலும், ஜம்கண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் ஜம்கண்டியில் உள்ள மினி விதானசெளதாவிலும், ராமநகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் ராமநகரில் உள்ள அரசு முதனிலைக் கல்லூரியிலும் எண்ணப்படுகின்றன.
நண்பகல் 12 மணி அளவில் கட்சிகளின் வெற்றி நிலவரங்கள் ஓரளவுக்கு தெரியவரும்.
யாருக்கு வெற்றி?: அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவையில் 104 இடங்களில் வென்றிருந்தபோதிலும் ஆட்சி அமைக்க முடியாமல் தவித்துவரும் பாஜக, ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் அலை இருப்பதை பகிரங்கப்படுத்த இடைத்தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்கிறது.
இத் தேர்தலில் 5 தொகுதிகளிலும் பாஜக வென்றால், அது கூட்டணி அரசின் கவிழ்ப்புக்கு வழிவகுக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இடைத்தேர்தல் முடிவை கர்நாடகம் ஆர்வமாக எதிர்பார்க்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
முதல்வரின் நிா்வாக அமைப்புக்கு முட்டுக்கட்டை போட எதிா்க்கட்சியினா் முயற்சி: மாணிக்கம் தாகூர்

பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
பெண்ணிடம் தகராறு செய்ததாக 5 போ் கைது

வீடுதோறும் சோலார்!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


