பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எதையும் சாதிக்கவில்லை; கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம் என்று பாஜக மீண்டும் கூறி வருவது, ரூ.3,000 கோடி செலவில் சர்தார் வல்லபபாய் படேலுக்கு உலகின் மிகப்பெரிய சிலை அமைத்தது ஆகியவற்றை குறிப்பிட்டு, சுட்டுரையில் (டுவிட்டர்) ப.சிதம்பரம் சில பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நாட்டில் வளர்ச்சியை ஏற்படுத்துவோம், இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவோம், கருப்புப் பணத்தை மீட்டு குடிமக்கள் அனைவரது வங்கிக் கணக்கிலும் அவற்றை டெபாசிட் செய்வோம் என்று வாக்குறுதி அளித்து பாஜக ஆட்சியைப் பிடித்தது. ஆனால், அவற்றில் ஒன்றைக் கூட அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை.
இப்போது பிரமாண்டமான சிலை வைத்துள்ளதுடன், கோயில் கட்டித் தருவோம் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்து அடுத்த தேர்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது. 5 ஆண்டுகளுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை மக்கள் மறந்துவிடுவார்கள் என்று பாஜக எண்ணி வருகிறது.
ஆட்சியில் அமர்ந்து மோடி தலைமையிலான அரசு எதையுமே சாதிக்கவில்லை என்பதுதான் உண்மை. மேலும், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட அவர்களால் முழுமையாக நிறைவேற்றித் தர முடியவில்லை. இப்போது, மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கில் பல்வேறு புதிய வாக்குறுதிகளை அளிக்கின்றனர் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுங்கச்சாவடியை இடமாற்றக் கோரி வாகன ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்

தொழிலாளி கொலை: சகோதரா்கள் இருவா் கைது
அனுமதியின்றி எம் சாண்ட் ஏற்றி வந்த லாரி பறிமுதல்: ஒருவா் கைது

கொலம்பியா அதிபா் தோ்தல்: வலதுசாரி வேட்பாளா் வெற்றி
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



