பனிப்படர்ந்திருக்கும் பிரதேசம் அல்ல.. யமுனையின் மிகக் கோரமான நிலை இது

வட இந்திய மக்களால் கொண்டாடப்படும் சாத் பாண்டிகை நேற்று வட இந்திய மாநிலங்களில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
பனிப்படர்ந்திருக்கும் பிரதேசம் அல்ல.. யமுனையின் மிகக் கோரமான நிலை இது
Published on
Updated on
1 min read


வட இந்திய மக்களால் கொண்டாடப்படும் சாத் பாண்டிகை நேற்று வட இந்திய மாநிலங்களில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

திருமணமான பெண்கள் விரதமிருந்து தங்களது குடும்பத்தினர் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்து நீர்நிலைகளில் நின்று சூரியனுக்கு படையலிட்டு வழிபடுவதே இந்த சாத் பண்டிகையின் முக்கிய அம்சம். இதேப்போன்று இளநீர்களை கையில் ஏந்தி ஆண்களும் வழிபாடு செய்வார்கள்.

சமீபத்தில் வட இந்திய மக்கள் பரவி வரும் சென்னை உள்ளிட்ட தென்னிந்தியாவிலும் இதுபோன்ற வழிபாடுகளை பார்க்க முடியும்.

நேற்ற இந்த விரதம் வட இந்திய மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இது தொடர்பான புகைப்படம் ஊடகங்களில் வைரலானது. அதில் யமுனை ஆற்றில் கலக்கப்பட்ட கழிவுகளால் யமுனை ஆறே நுரை பொங்க காட்சி அளிக்கிறது. அதில் நின்றபடி பெண்களும் ஆண்களும் சாத் விரதத்துக்கான பூஜையை நடத்தினர். 

அவர்கள் நிற்கும் இடமெங்கும் நுரைபொங்கக் காட்சி அளிக்கிறது. அதனை பார்ப்பதற்கு பனிப்பிரதேசத்தில் நின்றபடி பூஜை செய்வது போல இருந்தாலும், யமுனை ஆற்றின் சுகாதாரமற்ற சூழ்நிலையைத்தான் அது காட்டுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com