இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் பிரசாரம்: மாற்றி யோசிப்பாரா ராகுல்?

மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, ராகுல் காந்தி தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

News image
Updated On :23 நவம்பர் 2018, 9:33 am

PTI


மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, ராகுல் காந்தி தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த கால பிரசாரங்களிலும் சரி, தற்போதைய பிரசாரத்திலும் சரி, அவர் மோடி அரசின் நிறைவேற்றாத வாக்குறுதிகளையும் ரஃபேல் போர் விமான முறைகேடு குறித்தும் கடுமையாக சாடி வருகிறார்.

மத்திய அரசின் குறைகளைச் சொல்லி, ஆட்சியை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்பது ஒரு உக்திதான். ஆனால் தொடர்ந்து அதையே கையாண்டு வருவது பலனளிக்குமா?

மக்களின் தேவை என்ன? அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்த செய்ய வேண்டிய திட்டங்கள் என்ன? காங்கிரஸ் என்ன செய்யும்? எதைச் செய்யாது என்ற பட்டியல்களையும் ராகுல் தொகுத்து, சட்டப்பேரவைத் தேர்தல்களின் போது சொல்வதுதானே மக்கள் மனங்களைக் கொள்ளையடிக்கும் சிறந்த வழியாக இருக்கும். 

இன்று மத்தியப் பிரதேசத்தில் நடைபெறும் காங்கிரஸ் பிரசாரக் கூட்டத்துக்கு ராகுலைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடியுள்ளார்கள். இவர்களுக்கு ரஃபேல் போர் விமான முறைகேடும், அம்பானியும், நீரவ் மோடியும் யாரென்றே தெரியாது. இந்த நிலையில் மாற்றி யோசிப்பாரா ராகுல். மத்தியப் பிரதேசத்துக்கு என்னத் தேவை? என்ன செய்யப் போகிறோம் என்பதைத்தான் இங்கு சொல்லியாக வேண்டும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.