கர்நாடகா: மாண்டியாவில் கால்வாயில் பேருந்து கவிழ்ந்ததில் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
கர்நாடகாவில் விஸ்வேஷ்வரய்யா கால்வாயில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.


கர்நாடகாவில் விஸ்வேஷ்வரய்யா கால்வாயில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
கர்நாடக மாநிலம், மாண்டியாவில் இருந்து தனியார் பேருந்து ஒன்று இன்று காலை பாண்டவபுரம் புறப்பட்டுச் சென்றது. இந்தப் போருந்து பாண்டவபுரம் தாலுகா கனகநமராடி அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்து முற்றிலும் நீரில் மூழ்கியது. இந்தப் பேருந்தில் அரைநாள் பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பள்ளிச் சிறார்கள் அதிகளவில் இருந்தனர். விபத்தில் சிக்கி குழந்தைகள், பெண்கள் என 25 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...