சபரிமலை விவகாரம்: கேரள சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி
சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் புதனன்று கடும் அமளியில் ஈடுபட்டன.


திருவனந்தபுரம்: சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் புதனன்று கடும் அமளியில் ஈடுபட்டன.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து கேராளாவில் தொடந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக மகரவிளக்கு சீசனுக்காக தற்போது நடை திறக்கப்பட்ட நாட்களில் இருந்து போலீஸார் பக்தர்களுக்கு கடும் கெடுபிடிகளை விதித்து வருகின்றனர். இதன் காரணமாக அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில் சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் புதனன்று கடும் அமளியில் ஈடுபட்டன.
கேரள சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான புதனன்று இவ்விவகாரம் தொடர்பாக கடும் அமளி ஏற்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அதேபோல் பாஜகவினரும் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
சபரிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விதிக்கப்பட்ட கெடுபிடிகளை அகற்றும் வரை அவையை நடத்த விடமாட்டோம் என்று கோஷமிட்டுக் கொண்டு, கையில் பேனர்கள், மற்றும் அட்டைகள் ஏந்தியவாறு அவையில் தொடர்ந்து கடும் அமளியில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...