இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

தில்லியில் லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் இரண்டு நாள் மெகா பேரணி

விவசாயக் கடன் தள்ளுபடி, வேளாண் பொருட்களுக்கு விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் இன்று விவசாயிகளின் இரண்டுநாள் பேரணி தொடங்கியது.

News image
Updated On :29 நவம்பர் 2018, 7:58 am

PTI


புது தில்லி: விவசாயக் கடன் தள்ளுபடி, வேளாண் பொருட்களுக்கு விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் இன்று விவசாயிகளின் இரண்டுநாள் பேரணி தொடங்குகிறது.

இன்று ராமலீலா மைதானம் நோக்கியும், நாளை நாடாளுமன்றம் நோக்கியும் பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ள விவசாயிகள், ஆந்திரா, குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழகம், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம் என நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தில்லியில் ஒன்று திரண்டுள்ளனர்.

ஏராளமானோர் ரயில்கள் மூலம் இன்று காலை தில்லி வந்து இறங்கியுள்ளனர். பலரும் பஞ்சாப், ஹரியானா பகுதிகளில் இருந்து சாலை மார்கமாகவும் தில்லி வந்தடைந்துள்ளனர்.

சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தில்லியில் ஒன்றிணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.