நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

கிறிஸ்தவ மதம் மாறச் சொன்ன பள்ளி நிர்வாகம்: ஆசிரியை புகார் மீது உயர் நீதிமன்றம் உத்தரவு

கட்டாயம் கிறிஸ்தவ மதம் மாறச் சொன்ன பள்ளி நிர்வாகத்தின் மீது ஆசிரியை அளித்த புகார் மீது வழக்குப் பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
Updated On :29 நவம்பர் 2018, 1:13 pm

கட்டாயம் கிறிஸ்தவ மதம் மாறச் சொன்ன பள்ளி நிர்வாகத்தின் மீது ஆசிரியை அளித்த புகார் மீது வழக்குப் பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராஞ்சியில் செயல்பட்டு வரும் கார்மல் பள்ளியில் நளினி நாயக் என்ற ஆசிரியை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் 3 நிர்வாகிகள் மீது கட்டாயம் மதம் மாற மிரட்டியதாக போலீஸில் புகார் அளித்தார். ஆனால், போலீஸார் அதை வழக்குப் பதிவு செய்ய மறுத்ததாகக் கூறி ராஞ்சி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், இவ்வழக்கு மீதான விசாரணை செவ்வாய்கிழமை நடைபெற்ற நிலையில், அப்புகாரின் போரில் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என போலீஸாருக்கு ராஞ்சி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக, கார்மல் பள்ளியில் கிறிஸ்தவ மதம் மாறுவதாக அளித்த ஒப்புதலின் பேரிலேயே அவருக்கு அங்கு பணி நிரந்தரம் செய்யப்பட்டதாகவும், பின்னர் அதற்கு மறுத்ததால் தொடர்ந்து மிரட்டியும், பணி நீக்கம் செய்ததாக ஆசிரியை நளினி நாயக் தனது புகாரில் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.